வியாழன், 24 ஜூன், 2021

காமராஜர்! . பீடி தொழிலாளர்களின் கண்ணீரில் அரசியல் நடத்தியவர் .. பொற்கால ஆட்சி எல்லாம் கொடுத்துவிடவில்லை.

 Rajaiah Manuvel  :  இன்னொரு முக்கியமான சட்டப்படியான நிகழ்வினையும் சேர்த்துக் கொள்ளுங்கள்...
அன்றய கால கட்டத்தில், தமிழ்நாடு முழுவதும் பீடித் தொழிலாளர் குறைந்த பட்சக் கூலி அமுல் படுத்தப் பட்ட நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும்
(அன்றைய திருநெல்வேலி மாவட்டம் என்பது, இன்றய திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களை உள்ளடக்கியது)
இந்த சட்டம் அமுல் படுத்தப் படவில்லை.
அதற்கு அவர்கள் சொல்லிய சமாதானம் என்பது, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பீடித் தொழிலாளர்கள் முழுவதும் பெண் தொழிலாளர்களாகும்
அவர்கள் வீட்டிலிருந்தபடியே பீடித் தொழில் செய்வதால் கம்பெனி சட்டத்திற்கு உட்பட்டு வராமல் குடிசைத் தொழில் என்ற அங்கிகாரம் கொடுத்தது .
அன்றைய முக்கூடல் வகையறா முதலாளிகளுக்கு பாதுகாவலாக "ஏழைப் பங்காளர்" காமராஜர் அரசு இருந்தது என்பதை அறியவும்.
அதன் மூலம் தொழிலாளர்களுக்கு என்ன பாதிப்பு என்றால்,அரசு அறிவிக்கும் முறையான சம்பளம், முறையான காலங்களில் இவர்களுக்கு கிடைப்பதில்லை.


ஆறு மாதங்களாக இங்குள்ள பக்கத்து ஊதொழிலாளர்கள் முக்கூடலுக்கு நடையா நடந்து, ஒரு திருவிழாக் காலங்களில் மட்டும்,
கோயில்களிலே சாயங்கால கொடைக்கான கொட்டுச் சத்தம் கேட்ட பின்னர்,
இரவோடு இரவாக கையில் வந்ததை கொடுத்து வந்தார்கள்.
அப்போதும்கூட  இந்த அப்பாவி மக்கள் என்ன இருந்தாலும் சொக்கலால் என்றால் சும்மாவா???
பெட்ரமாக்ஸ கொழுத்தி சம்பளம் போட்டவர் அல்லவா என்றும் பெருமை பேசும் மக்கள்!!!
இந்த சம்பளம் என்ன தெரியுமா மக்களே??? !!!
அப்போது 1970 வாக்கில், நான் வேலை செய்து வந்த மங்களூர் கணேஷ் பீடிக் கம்பெனியில் 1000 பீடி சுற்றுக் கூலி ரூ1. 74 பைசாவை நானே கொடுத்து வந்தேன்.
இந்த நிலையில் இந்த முக்கூடல் வகையறா கம்பெனிகள் கொடுத்த சம்பளம் என்பது பத்தணா கூலி யாகும். பத்தணா என்பது வெறும் ரூ. 0.62 பைசா மட்டுமே...

கிட்டத்தட்ட மூன்றில் இருபங்கு சம்பளத்தை மக்களிடமிருந்து கொள்ளையடித்த வந்தார்கள்.
இதன் காரணமாக அன்றய காங்கிரசுக்கு தேர்தல் செலவை செய்து வந்ததும் அப்பட்டமான உண்மை!!!

1972 முதல் கலைஞர் ஆட்சியில், தமிழ் நாடு முழுவதும் 1000 பீடி சுற்றுக் கூலி எல்லாகம்பெனிகளுக்கும்ரூ 2. 20.பைசா என அறிவித்தவர் கலைஞர்..

இதற்கு மூல காரணமாக இருந்து உழைத்தவர் 1967 ல் ஆலங்குளம் தொகுதியில் திமுக வில் உதயசூரியனில் வெற்றி பெற்றவர் எங்கள் பகுதியின் மண்ணின் மைந்தர் அண்ணன் ஆலடி அருணா அவர்கள் ஆகும்...

கருத்துகள் இல்லை: