வெள்ளி, 25 ஜூன், 2021

லண்டன் தெருவில் ஒரு கிராமத்து பெண்மணி போல் நடந்து செல்லும் சந்திரிக்கா அம்மையார்

I am chairperson of SLFP, not Sirisena : Chandrika Bandaranaike | Siyatha  News - English

செல்லபுரம் வள்ளியம்மை  :  எனது நண்பர் ஒருவர்  துபாயில் இருக்கிறார்.  ஹோட்டலில் வேலை செய்கிறார் ஒரு நாள் அந்த ஹோட்டல்  முன்பாக  ஒரு அம்மையார் நடக்கவே முடியாமல் ஒரு மாதிரி தனது சூட்கேசையும் தள்ளிக்கொண்டு வந்திறங்கினார் ..
அவர் ஹோட்டல் கவுண்டரில் அறை சாவியை பெற்றுக்கொண்டு இலங்கை தூதரகத்தின் தொலைபேசி இலக்கத்தை தாருங்கள் என்று கேட்டார்
அவரை உற்று நோக்கிய எனது நண்பருக்கு இவரை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறது என்று யோசித்து உடனே ஞாபகம் வந்தது அது இலங்கை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார்.
மிகவும் நொந்து நொடித்து போனவர் மாதிரி காட்சி அளித்தார் என்று நண்பர் கூறினார்
உலகின் முதல் பெண் பிரதமரின் மகள். தாய் தந்தை இருவருமே பிரதமர்கள்
ஒரு தடவை பிரதமராகவும் இரு தடவைகள் ஜனாதிபதியாகவும் இருந்தவர்
1995 இல் கடுமையாக போரை நடத்தி யாழ்ப்பாணத்தை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து மீட்டவர்.


அதன் காரணமாகவே அதன் பின்பு வடமாகாணத்தில் உருவான தலைமுறைகள் கல்வி கற்று பல்கலை கழகம் சென்று இன்று டாக்டர்களாகவும் பொறியியலாளர்களாகவும் மேலும் பல துறைகளில் கல்வி கற்று ஒரு தலைதூக்கிய சமூகமாக உருவாகி இருக்கிறது.
அவரின் ஆட்சி காலத்தில் 2001 இல் யாழ்ப்பாணம் முழுவதும் கடுமையன ராணுவ கட்டுப்பாட்டுக்குள் இருந்தது  மின்சாரம் இல்லை பொருளாதார தடை விதிக்கப்பட்ட ஒரு மாவட்டமாக காட்சி அளித்தது.
புலிகளின் ஆயுத உற்பத்திக்கு பயன்பட்டு விடக்கூடாது என்பதற்காக பல பொருட்களை தடை செய்திருந்தது அவரது அரசாங்கம்
அங்கு யாரும் இலகுவில் சென்றுவிட முடியாது கடும் கெடுபிடி கேள்விகள் ..ஒரு மாதிரியாக நான் அப்போது அங்கு சென்றிருந்தேன் ஒரு மாதம் தங்கி இருந்தேன் .
ஆனால் ராணுவ பாதுகாப்புடன் பள்ளிக்கூடங்கள் இயங்கின .ராணுவ பாதுகாப்புடன் பள்ளிக்கூட பேருந்துகள் இயங்கின   .
காலை பள்ளிக்கூடம் செல்லும் சிறுவர்கள் மாலை பாதுகாப்புடன் வீடு வந்து சேர்வார்கள் என்ற நம்பிக்கை இருந்தது
அடிப்படை உணவு விநியோகம் இருந்தது . மின்சாரம் இல்லாவிட்டாலும் வாழ்க்கை ஓடிக்கொண்டு இருந்தது  பின்பு மின்சாரம் கணினி எல்லாம் வந்தவாழ்க்கையினை விட அந்த மின்சாரம் இலலாத வாழ்க்கை ரசனை மிகுந்ததாக இருந்தது என்று பலரும் கூறுவார்கள்  அது ஏன் என்பது பற்றி பிறிதோர் இடத்தில் ஆராந்து பார்க்கலாம்
அந்த சந்திரிகா அம்மையார் காலத்தில்தான் ஆங்கில மொழிமூலம் கல்வி மீண்டும் அறிமுகப்படுத்த பட்டது.
உண்மையில் 95 இல் நடந்த இடப்பெயர்வில் இருந்து மீண்டும் யாழ் நோக்கி வந்த மக்கள் தப்பி பிழைத்தார்கள்
புலிகளின் பிடியில் இருந்து மீள முடியாமல்,
அல்லது புலிகளின் போர்த்திறமையில் நம்பிக்கை வைத்து அங்கேயே தங்கியவர்கள் பட்ட பாடு சொல்லும் தரமன்று.  பலர் இன்றில்லை!
அம்மையார் சந்திரிகாவின் காலத்திலேயே வடக்கு கிழக்கில் இருந்த ஐந்து முக்கிய நகரங்களையும் புலிகளிடம் இருந்து ராணுவம் கைப்பற்றி இருந்தது (யாழ்ப்பாணம் ,திரிகோணமலை, வவுனியா, மன்னார், மட்டக்களப்பு)
அதன் பின்பு புலிகளின் தற்கொலை குண்டுதாரியின் தாக்குதலில் ஒரு கண்ணை இழந்தார். அவரோடு மேடையில் இருந்த பலர் இறந்தார்கள்
சந்திரிகா அம்மையார் வாழ்வில் எவ்வளவோ உயரங்களை கண்டபோதும் ஒரு சாதாரண மனுஷியாகவே நடந்து கொள்பவர்  
இவர் சாதாரண பேருந்துகளிலிலும் மெட்ரோ ரயில்களிலும் நடைபாதையில் சர்வசாதாரணாமாக செல்வார்
லண்டன் தெருவில் ஒன்றுமே அறியாத ஒரு கிராமத்து அம்மையார் போன்று நடந்து செல்லும் இந்த புகைப்படம் பல செய்திகளை சொல்கிறது
இன்றும் தமிழ் மக்களின் நெஞ்சில் இவருக்கு ஒரு உன்னத இடம் இருக்கிறது

   


கருத்துகள் இல்லை: