புதன், 23 ஜூன், 2021

திராவிடம் பெரியார் ... கிளப் ஹவுஸ் லீக்ஸ்

செல்லபுரம் வள்ளியம்மை  : பெரியாரிய கருத்தினால் ஈர்க்கப்பட்டவர்கள் என்று கூறப்படுவது பற்றிய எனது பார்வை!
பெரியார் திராவிடம் என்ற சொற்களை ஈழப்போராட்டத்தோடு தொடர்பு படுத்தி ஒரு குழப்ப அரசியல் விவாதம் தற்போது நடக்கிறது
இலங்கை பிரச்சனையில் பெரியாரும் இல்லை திராவிடமும் இல்லை . அப்படியாயின் இவர்கள் ஏன் ஈழப்பிரச்சனையோடு இவற்றை தொடர்பு படுத்துகிறார்கள்?
இலங்கையில் பெரியாரின் கருத்துக்கள்  அறியப்படவில்லை. அங்கு உருவான பல பிரச்சனைளுக்கு இதுவும் ஒரு காரணம் என்றெண்ணுகிறேன்  
ஏனெனில் ஈழப்போராட்டம் ஒரு மக்கள் நலம் சார்ந்த விதத்தில் உருவாகாமல் வெறும் ஆயுத விளயாட்டாகவே நடந்து முடிந்துவிட்டது.
தமிழ்நாட்டில்கூட பெரியார் கருத்துக்கள் கொஞ்சம் திரிபடைந்து விட்டது என்று தோன்றுகிறது.
அதற்கு காரணாம் பெரியார்/ திராவிட இயக்கங்களின் சில வரலாற்று தவறுகள் என்றெண்ணுகிறேன்  

பெரியார் பெயரை உச்சரித்தலோ திராவிடம் என்று உச்சரித்தலோ மாத்திரம் போதாது.
இந்த சொற்களின் உள்ளார்ந்த கருத்துக்களை என்ன என்ற புரிதல் வேண்டும்.
மனிதர்களை ஜாதியாக பிரித்து அதன் நீட்சியாக எண்ணற்ற வகையில் மேலும் மேலும் பிரித்து ஒருவரை ஒருவர் அடக்கி மேலாண்மை செலுத்துவதுதான் ஆரிய சமூக கட்டமைப்பின் சாராம்சம்.இதுதான் பார்ப்பனீயம்!
இதற்கு நேர் எதிரான திசையில் எல்லா மனிதர்களும் சமமான சக மனிதர்களே என்ற கோட்பாடுதான் திராவிட கருத்தியலாகும் .இதைத்தான் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று கூறுவது.  
இதைத்தான் பெரியார் முன்னெடுத்தார்.
எனது கவனத்தை ஈர்த்த மூன்று வகை பெரியார் அல்லது திராவிட குழுக்களை பற்றிய எனது பார்வை:
 
1  இடையிடையே பெரியார் என்ற பெயரை உச்சரிக்கும் தமிழ் தேசியர்கள் என்ற போர்வையில் உள்ள ஜாதி அபிமானிகள் . சீமான் மணியரசன் நெடுமாறன் வகையினர் முழுக்க முழுக்க பாசிச பிரசாரகர்களாகவே மாறிவிட்டவர்கள்.

2 பெரியாரியலாளர்கள் அல்லது திராவிட இயக்கத்தை அல்லது திராவிடர் கழகங்களை சேர்ந்தவர்கள் என்று அறியப்பட்டவர்கள்.
இவர்கள் பாசிசத்திற்கும் விடுதலை போராட்டத்துக்கும் உள்ள வேறுபாடுகளை புரிந்து கொள்ளாமல் தவறான பாதையில் நெடுந்தூரம் சென்றுவிட்டவர்கள்

3 மேற்குறிப்பிட்ட  இரு பகுதியினரும் தவறு,
  நாங்கள்தான் உண்மையான திராவிட / பெரியார்வாதிகள் என்று கூறும் அசல் கார்ப்பரேட் தொண்டர்கள் அல்லது அடியாட்கள். அல்லது  திராவிடம் 2 அல்லது அரக்கர்கள் என்று அறியப்பட்டவர்கள்.
இவர்களுக்கு ஆழமான கொள்கை பிடிப்பு எதுவும் இருப்பதாக தெரியவில்லை  
மக்களையோடு மக்களாக கலந்து பழகும் வாய்ப்பு இல்லாதவர்கள்
பெரும்பாலும் எங்கோ ஒரு உயரத்தில் இருந்து கொண்டு கணினிக்கு முன்பாக புள்ளிவிபரங்களோடு அரசியல் நடத்துபவர்கள்
இவர்கள் இன்னும் தரைக்கு வரவே இல்லை. திராவிட கருத்தியலோ பெரியார் கோட்பாடுகளோ எல்லாம் இவர்களின் கணினியில் மட்டும்தான் இருக்கிறது என்று தோன்றுகிறது

இவர்களின் தற்போதைய இலக்கு புலிகள் என்பதாக மட்டுமே இருக்கிறது  
அதற்காக எந்த அளவு மோசமாகவும் பாய்ந்து பிரண்டுவது தவறில்லை என்ற கோட்பாட்டில் உள்ளவர்கள்
சுருக்கமாக சொன்னால் மொத்த ஈழத்தமிழர்களும் இவர்களுக்கு எதிரிகள்தான் என்பது போல பிரசாரம் செய்வதுதான் இவர்களின் தற்போதைய களப்பணியாகும்
இவர்களின் தாக்குதல்களில் பெரும்பாலும் இணையத்தள பிரபலங்களான ஜெயமோகன் மதுவந்தி எஸ் வி சேகர் போன்ற காலரி சமாச்சாரங்கள் இருப்பது இவர்களின் கொள்கை பிடிப்புக்கு சான்றாகும்

மேற்குறிப்பிட்ட மூன்று வகையினரும் பெரியாரை விட்டு வெகுதூரம் சென்று விட்டவர்கள்
ஆரிய பார்ப்பனீய கருத்துக்களை அப்படியே வரித்து கொண்டவர்கள்  
தங்கள் தாமே  மீது தவறான லேபில்களை ஒட்டிக்கொண்டு களமாடுகிறார்கள்    
       

கருத்துகள் இல்லை: