முகமது ஜமீல் : RSS ன் கூரிய ஆயுதமா? அம்பேத்கரும், அம்பேத்கரியமும்:-
திராவிட/மார்க்சீயத்திற்க்கு முழுக்க முழுக்க நேர் எதிரானவர் அம்பேத்கரும் அவரின் அம்பேத்கரியமும். அம்பேத்கரின் முரணான கருத்துக்களை எடுத்து அப்படியே போட்டால்.
அடுத்து அம்பேத்கரை விமர்சிப்பதால் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களை அவமதிப்பது போல் ஆகும் என்கிறார்கள். என்னுடைய எந்த பதிவாவது, ஒடுக்கப்பட்ட மக்களை தவறாக சித்தரித்து இருக்கிறதா? அம்பேத்கரின் கருத்தை அப்படியே எடுத்துப்போடுகிறேன்...முரணான கருத்தை பூசி மொழுகி புது விளக்கமா தர முடியும்?
இது அம்பேத்கரை விமர்சிக்கும் காலம் இல்லை. இப்போது இந்து துவா சூழலில் அம்பேத்கரை விமர்சிக்க வேண்டாம்.அம்பேத்கரின் முரணான கருத்துக்களை நீக்கி விட்டு அம்பேத்கரை எடுத்துக்கலாம். என்று மிக சாதரணமாக சொல்லி விட்டு கடந்து விடுகிறார்கள்.
ஆனா RSS ,பாஜகவின் ஆட்சி அனைத்தும் சவார்க்கரையோ கோல்வால்கரையோ, முன்னிறுத்தி நடக்கவில்லை. பாஜக 2014 ல் ஆட்சிக்கு வந்ததில் இருந்து இன்று வரை அனைத்து சட்ட திட்டங்களையும் அம்பேத்கர் பெயரை வைத்தே அவரின் கருத்தை வைத்தே ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறது.அம்பேத்கரின் அனைத்து கருத்தும் RSS காரன் கருத்தை விட அதற்க்கும் மேலாக அவர்களுக்கு வலு சேர்க்கும் கருத்துக்களாக இருக்கிறது.
சவார்க்கருக்கும் அம்பேத்கருக்கும் ஒரு கம்பேரிசன் வைப்போமே,
சவார்க்கர் மக்கள் மாட்டுக்கறி தின்பதை ஆதரிக்கிறார். ஆனால் அம்பேத்கர் "மாமிசம் தின்பது பற்றி என்னிடம் கேட்கிறார்கள். ஒரு குடும்ப பெண் வறுமையில் எத்தகைய கொடுமை நேர்ந்தாலும் அவள் விலை மகள் ஆக மாட்டாள்". என்று பதில் சொல்கிறார். நான் அமெரிக்க நியூயார்க்கில் எங்கும் உணவுகள் சாப்பிடுவது இல்லை அனைத்திலும் மாட்டு கொழுப்பு கலந்து இருக்கிறது. அதனால் உடல் நலத்தை பேன முடியவில்லை என்று குறிப்பிடுகிறார் அம்பேத்கர் . அம்பேத்கர் கடித தொகுப்பு பக்கம் 44ல் இவ்வாறு குறிப்பிடுகிறார் அம்பேத்கர் .எவளவு பெரிய முரண் இது?
மேலும் அம்பேத்கர் தீண்டாமையைப்பற்றி குறிப்பிடும் போது புத்த மதம்தான் மாட்டுக்கறியை தடை பண்ணி இருக்கிறது. அதன் மூலம் சமூகத்தில் உணவின் மூலமாகவும் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் பழங்குடிகளுக்கு எதிராக தீண்டாமை ஏற்பட்டு இருக்கிறது என்று தொகுதி 36 ல் பக்கம் 198 டூ 201 ல் குறிப்பிட்டு விட்டு. புத்த மதத்திற்க்கு மாறி மாமிசம் மாட்டுக்கறி சாப்பிடுவதற்க்கு எதிராக அம்பேத்கர் பேசி இருக்கிறார். இதற்க்கு சவார்க்கர் பராவால்லையே, திராவிட / மார்க்சீயம் பேசுபவர்கள் அம்பேத்கரை முன்னிறுத்துவதற்க்கு சவார்க்கரை முன்னிறுத்தலாமே?
அடுத்து இந்துராஷ்ட்ரம் அமைக்க தீவிர முயற்ச்சி செய்த சவார்க்கர் இங்க உள்ள முஸ்லீம்களை எல்லாம் விரட்டனும்னு பகிரங்கமா சொல்லலே.ஆனா அம்பேத்கர் எஞ்சிய முஸ்லீம்களை வெளியேற்றுதலே நாட்டுப்பற்றின் அடையாளமா இருக்கும்னு சொல்லுறாரு. இந்திய ராணுவத்தில் இசுலாமியர்களை செல்வாக்கை குறைத்து விரோத சக்திகளை வெளியேற்றி விட வேண்டும், நமது பூமியை நாம பாது காக்கனும்னு சொல்லுறாரு அம்பேத்கர். முஸ்லீம்கள் அனைவரும் நாட்டுப்பற்று இல்லாதவர்கள்னு சொல்லுறாரு அம்பேத்கர்.
அதனால்தான் RSS பாஜக கூட்டம் தன் அனைத்து நாசக்கர வேலைக்கும் அம்பேத்கரை மட்டுமே துணைக்கு அழைத்துக்கொள்கிறது.
அடுத்து தான் ஒரு மிக பெரிய அதிர்ச்சி காந்தி கொலையை எவ்வாறு மறைமுகமாகவும் நேரடியாகவும் ஆதரித்து இருக்கிறார்னு பாப்போம்
"மென்மையான உள்ளமும் கல்நெஞ்சத்தன்மையும் ஒருங்கே பெற்றிருந்த அம்பேத்கர் காந்தியின் கொலையைப்பற்றி எத்தகைய உணர்வையும் வெளிப்படுத்தவில்லை.
அம்பேத்கர் வெளிப்படையாக ஒரு சொல்லும் சொல்லவில்லை. அறிக்கையும் வெளியிடவில்லை. காந்தியின் இறுதி ஊர்வலத்தில் மட்டும் சிறிது நேரம் கலந்துகொண்டுவிட்டு தன் படிப்பறைக்கு திரும்பி விட்டார்" என்று
அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்று நூல் தனஞ்செய் கீர் 597 ல் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது..
காந்தி மீது கொள்ளை சித்தாந்தம் நடவடிக்கை மீது ஆயிரம் விமர்சனம் இருக்கட்டும்.. ஆனா "காந்தி இறப்பு ஒரு நல்ல ஆபாத்து, காந்தி ஒரு மராத்தியன் கைகளில் இறந்திருக்க கூடாது என்பதில் நான் உன்னுடன் உடன்படுகிறேன் என்கிறார் அம்பேத்கர்.காந்தி ஓர் அபாயமாக மாறி விட்டு இருந்தார். திரு விவிலியம் சொல்வது தீமையிலும் சில நன்மைகள் நடக்கும் . ஆக காந்தியின் மரணத்தில் இருந்து சில நன்மைகள் நடக்கலாமம என்று எண்ணுகிறேன்"
அம்பேத்கர் தன் நண்பருக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார் அம்பேத்கரின் கடித தொகுப்பில் அப்படியே இருக்கிறது.
அடுத்து மனோகர் மல்கோங்கர் எழுதிய காந்தியைக் கொன்றவர்கள் என்ற புத்தகத்தில். காந்திக்கொலையில் சவார்கர் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை என்று கூறியதாக குறிப்பிடுகிறார்.
கோட்சேவால் கொலை செய்யப்பட்டு இறந்த காந்தி மீது எவ்வளவு வன்மம்?
நேற்று அம்பேத்கர் எங்கு எல்லாம் பெரியாரோடு முரண்படுகிறார் என்று ஒரு கட்டுரை எழுதி இருக்கிறேன் படிக்கவில்லை என்றால் அதை படித்துவிட்டு மேலும் இந்த கட்டுரையை தொடருங்கள். அதற்க்கான லிங்க் இதோ...
https://www.facebook.com/share/p/2GWbmLHxahR6MnEP/
இவ்வாறு அனைத்திலும் முரணாகவும் புதிராகவும் இருக்கும் அம்பேத்கர்.
இங்கு நமக்கு அறிமுகபடுத்தப்பட்டு இருக்கிறது போல் அம்பேத்கர், நமக்கான தலைவர் இல்லை.. 1950 டூ 1989 வரை (இடையில் 1977 டூ 1979 ஜனதா கட்சி கூட்டணி ஆட்சியை தவிர்த்து)தனிப்பெரும்பாண்மையாக சர்வாதிகார ஆட்சி பண்ணிய காங்கிரசை எதிர்க்க, பகுத்தாராயமல் எதிர் கட்சிகள் எல்லாம் அம்பேத்கரியத்தை கூட்டு வைத்து காங்கிரசை எதிர்த்தது.
ஆனால் அம்பேத்கர் அவர் சார்ந்த மாநிலத்தில் கூட செல்வாக்கு இல்லாதவர். தான் சந்தித்த தேர்தல்கள் எல்லாம் படு தோல்வி, களப்போராட்டம் எதுவும் இல்லை. ஆரம்பித்த போராட்டங்கள் எல்லாம் இடையில் நிறுத்தம். ஆதரவாளர்கள் இல்லை. பொது கூட்ட மேடைகளில் கூட பேசியது இல்லை பெரும்பாலும் உள்ளரங்க மேடைகளில்தான் பேசி இருக்கிறார்.
1956ல் அம்பேத்கர் பௌத்த மதத்திற்க்கு மாறிய போது மட்டும் வெறும் 2.85 லட்சம் பேர் மகர் சமூகத்தை சேர்ந்தவர்கள் அவருடன் மதம் மாறி இருக்கிறார்கள். ஆனால் தலித் முரசு ஆசிரியர் புளுகு(புனித) பாண்டியன் போன்றவர்கள் 3 லட்சம் பேர் ஆக்கி, 6 லட்சம் பேர் ஆக்கி 9,10 லட்சம் பேர் ஆக்கி இன்று 12 லட்சம் பேருடன் அம்பேத்கர் பௌத்த மதத்தை தழுவினார்னு கதை அடுச்சு விடுறாங்க.
இந்தியா முழுவதும் உள்ள ஒட்டு மொத்த ஒடுக்கப்பட்ட மக்களிடம் 1990 களில் பன்னாட்டு பாசிச கும்பல், NGO க்கள் அம்பேத்கரை வம்படியாக திணிக்கும் வேலையை பார்த்து இருக்கிறார்கள். இன்னும் பல்லாயிரக்கணக்கான NGOக்கள்
பார்த்துக்கொண்டும் இருக்கிறார்கள்.
அவர்களின் நோக்கம் என்ன? பொதுவுடமை சிந்தனை மார்க்சீயம் மற்ற ஏனைய முற்போக்கு பெரியாரியம் போன்ற சிந்தனைகள் பரவிடக்கூடாதுனு முழுக்க முழுக்க வேலை பார்த்து கொண்டு இருக்கிறார்கள். இந்தியாவில் தமிழ் நாட்டில் கம்யூனிஸ்டுகள் குறைந்து அழிந்ததற்க்கு அம்பேத்கரியம் என்ற கூரிய ஆயுதம் பன்னாட்டு பாசிச கும்பலின் NGO க்களுக்கும். இந்தியாவின் பாசிச கும்பலான RSS பாஜகவிற்க்கும் ஆயுதமாக அம்பேத்கரும் அம்பேத்கரியமும் பயன்படுகிறார்.
இந்தியாவில் மற்றும் தமிழ் நாட்டில் மார்க்சீயம் கம்யூனிசம் எண்ணிக்கையில் குறைந்து அழிந்தே விட்டது. தமிழ் நாட்டில் பெரியாரியம் பேசுபவர்கள் 500 பேர் இருப்பார்களா? பெரியாருக்கே சேர்த்து நாங்கதான் பேசுறோம்னு ஒரு அம்பேத்ரிஸ்ட் மேடையில சொல்லி கிட்டு சிரிக்கிறார்.
யார்தான் எந்த சித்தாந்தம்தான் இவைகளை இங்கு அழித்தது?
அம்பேத்கர் முழுக்க முழுக்க போலியாளும் பொய்களாலும் உருவாக்கப்பட்ட போலி பிம்பம்.. நீங்கள் அம்பேத்கர் பற்றி கேட்பது போல படிப்பது போல அவர் எந்த கருத்தையும் சொல்லவில்லை.
உதாரணத்திற்க்குச் சொல்கிறேன். சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும் னு சொன்னது பாடலாசிரியர் பழனி பாரதி அதை அம்பேத்கர் சொன்னதா அடுச்சு விடுறாங்க. அடுத்து நான் யாருக்கும் அடிமை இல்லை எனக்கு நானும் அடிமை இல்லனு சொன்னது அறிஞர் அண்ணா. சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் என்ற நூலில் அண்ணா குறிப்பிட்டு இருக்கிறார்.அதை அம்பேத்கர் சொன்னதாக பரப்பி விட்டு இருக்கிறார்கள். அது போல பெரியார் காந்தி நேரு மார்க்ஸ் பேசிய பல்வேறு விசயங்களை அம்பேத்கர் பேசியதாக அடித்து விட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
நீங்கள் அம்பேத்கரை விமர்சிக்கவில்லை அம்பேத்கரின் முரணான கருத்தை விமர்சிக்கவில்லை என்றால். அதை தூக்கி வரும் பாஜகவை அடித்து எந்த பயனும் இல்லை. பாம்புக்கும் வலிக்காம பாம்பு அடிக்குற கொம்புக்கும் வலிக்காம காத்துல கம்ப வச்சு சுத்த வேண்டியதுதான். பாஜக அம்பேத்கரை வச்சு இந்து ராஸ்டரம் அமச்ச பின்னாடிதான் இதுதான் அம்பேத்கர விமர்சிக்குற நேரம்னு சுதாரிக்கப்போறீங்களா?
திமுக,CPI,CPIM இதுப்போன்ற ஓட்டு அரசியல் கட்சிகள்தான் அம்பேத்கரை விமர்சிக்க முடியாது, ஆனால் அதிக எண்ணிக்கையில் இருக்கிற சைவ மடங்கள் போல அத்தனை பெரியாரிய மார்க்சீய அமைப்புகள் இயக்கங்கள் இருக்கிறது. ஆனால் அத்தனையும் அம்பேத்கர் பஜனை மடமாக மாறிவிட்டது.அம்பேத்கரைக்கூட விமர்சிக்க வேண்டாம் அட்லீஸ்ட் பெரியாரிஸ்டுகள் பெரியாரை மட்டும் முன்னிறுத்துங்கள்,திராவிடத்தை மட்டும் முன்னிறுத்துங்கள், கம்யூனிஸ்டுகள் காரல் மார்க்சை முன்னிறுத்துங்கள்.ஆனா பெரியாருக்கு தலைவர் அம்பேத்கர்னு அடுச்சு விடுறீங்க. இந்தியாவில் பிறந்த மார்க்ஸ் அம்பேத்கர் னு சொல்லுறீங்க இது என்ன மாதிரியான துதி?
நீங்கள் அம்பேத்கரை பிறந்த நாள் நினைவு நாளில் நினைவு கூறுவது என்பது வேறு, ஆனால் அம்பேத்கரை உங்கள் இயக்கத்தில் பயன்படுத்துவது பத்து கோட்சேவை மொத்தமாக, பயன்படுத்துவற்க்குச் சமம்.
நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக