வெள்ளி, 26 ஏப்ரல், 2019

தேடப்படும் பயங்கரவாதிகளின் படங்களை இலங்கை அரசு வெளிட்யிட்டது

தினத்தந்தி: கொழும்பு, இலங்கையின் கொழும்பு நகரில் கடந்த ஞாயிற்று கிழமை ஈஸ்டர் பண்டிகையன்று காலை மூன்று கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் மூன்று 5 நட்சத்திர ஓட்டல்கள் மீது திடீரென குண்டுவெடிப்பு தாக்குதல்கள்
நடத்தப்பட்டன.
அதன்பின் அன்று மதியம் 2 மணியளவில் இரு தற்கொலை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த தாக்குதல்களில் இதுவரை 359 பேர் உயிரிழந்து உள்ளனர். இவர்களில் 36 பேர் வெளிநாட்டினர். 14 வெளிநாட்டவர்களை பற்றிய விவரம் தெரியவரவில்லை.
 12 வெளிநாட்டினர் உள்பட 500 பேர் வரை காயமடைந்து உள்ளனர். இதுவரை 76 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இலங்கையில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்திய 9 பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் இன்று வெளியிடப்பட்டு உள்ளன.
 இந்த 9 பேரில் 2 பேர் பெண்கள். இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களை அடுத்து அதிபர் மைத்ரிபால சிறிசேனா அறிவுறுத்தலின் பேரில் அந்நாட்டு பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ பதவி விலகியுள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை அதிபர் சிறிசேனாவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

கருத்துகள் இல்லை: