சனி, 27 ஏப்ரல், 2019

50 வயதை கடந்தவர்களை வீட்டுக்கு அனுப்ப திட்டம்! பாஜக அரசின் மற்றுமொரு சர்க்கஸ்


தினமலர் :புதுடில்லி: நாடு முழுவதும், 50 வயதை கடந்த, வேலை பார்க்காமல், 'சீட்'டை தேய்க்கும், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை, வீட்டுக்கு அனுப்ப, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
கடந்த நான்கு ஆண்டுகளில், இவர்கள் செய்த வேலைகள் குறித்து, ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
நடவடிக்கைமத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: பிரதமர் மோடி தலைமையிலான, தற்போதைய மத்திய அரசு, ஊழலுக்கு எதிரான விஷயத்தில், கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதிலும், அரசு துறைகளில், உயர் பதவிகளில் உள்ளவர்களில் சிலர், ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக, புகார் எழுந்துள்ளது.இதையடுத்து, 50 வயதைகடந்த அல்லது 25 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய, 1,143, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, கடந்த நான்குஆண்டுகளில், இவர்கள் செய்த பணிகள் என்ன என்பது குறித்து, ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.இவர்களில், வேலை எதுவும் பார்க்காமல், வெட்டியாக, 'சீட்'டை தேய்த்து, நேரத்தை ஒப்பேற்றும் அதிகாரிகள் யார் என்பதை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.கடந்த, 1958ல், நிறைவேற்றப்பட்ட, அகில இந்தியபணித் துறை தொடர்பான சட்ட விதிகளின் படி, இந்த அதிரடி நடவடிக்கையை எடுக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஊழலை ஒழிக்கஇது தொடர்பாக, அனைத்து மாநில அரசுகளுக்கும்</ , மத்திய அரசு, ஏற்கனவே உத்தரவிட்டும், பெரும்பாலான மாநிலங்கள், இதுகுறித்த நடவடிக்கையை இன்னும் துவங்கவில்லை.எனவே, அனைத்து மாநில அரசுகளுக்கும், இதுகுறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.சரியான நேரத்தில், இதுகுறித்து ஆய்வு நடத்துவதன் மூலம், ஊழலை ஒழிக்க முடியும் என்பதால், தற்போது இந்த நடவடிக்கையை, மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துகள் இல்லை: