வியாழன், 25 ஏப்ரல், 2019

தலைமை நீதிபதி மீதான பாலியல் வழக்கு: பாப்டே குழு சட்டவிரோதமானது - பெண் வழக்கறிஞர்கள்

தலைமை நீதிபதி மீதான பாலியல் வழக்கு: பாப்டே குழு சட்டவிரோதமானது - பெண் வழக்கறிஞர்கள்tamil.news18.com/ :பாப்டே குழு 90 நாட்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும், அதுவரை தலைமை நீதிபதி தனது பொறுப்புகளில் இருந்து விலகியிருக்க வேண்டும் என்றும் பெண் வழக்கறிஞர்கள் கோரியுள்ளனர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை அவமானப்படுத்த திட்டமிட்ட சக்திவாய்ந்த நபர் குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் புகாரை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள நீதிபதி பாப்டே தலைமையிலான குழு சட்டவிரோதமானது என பெண் வழக்கறிஞர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது அவரது அலுவலகத்தில் பணியாற்றிய முன்னாள் பெண் ஊழியர் ஒருவர், பாலியல் அத்துமீறல் புகார் அளித்தார். இது தமது நேர்மைக்கு விடப்பட்ட சவால் எனக் கூறிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளில் ஒருவரான அருண் மிஸ்ரா தலைமையில், நீதிபதிகள் ரோஹிந்தன் நாரிமன், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார்.



இதனிடையே, கடந்த திங்கட்கிழமையன்று, உத்சவ் பெயின்ஸ் என்ற வழக்கறிஞர், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தலைமை நீதிபதி மீதான புகார் அதிர்ச்சியளிப்பதாகவும் அவருக்கு எதிராக மிகப்பெரிய சதி நடப்பதாகவும் கூறியிருந்தார்.

மேலும், புகார் கூறிய பெண் சார்பில் தாம் முதலில் ஆஜராக விரும்பியதாகவும் ஆனால்  வழக்குத் தொடர்பாக அஜய் என்பவர் தன்னை அணுகி ஒன்றரை கோடி ரூபாய் அளவுக்கு பேரம் பேசியதாகவும் பிரமாணப் பத்திரத்தில் கூறியிருந்த வழக்கறிஞர், பேரம் பேசிய நபரை தாம் விரட்டி விட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, உச்சநீதிமன்ற சிறப்பு அமர்வு உத்தரவிட்டவாறு வழக்கறிஞர் உத்சவ் பெயின்ஸ், நேரில் ஆஜரானார். அப்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிரான கூட்டுச்சதி தொடர்பான, சிசிடிவி பதிவுகளை சமர்ப்பித்ததோடு குற்றத்திற்கு மூளையாக செயல்படுகிறவர் மிகவும் சக்திவாய்ந்தவர் என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து, நீதிபதிகளின் உத்தரவின்பேரில் நேற்று பிற்பகலில் சிபிஐ இயக்குநர் டெல்லி காவல்துறை ஆணையர், மத்திய உளவுத்துறை இயக்குநர் ஆகியோர் ஆஜரான நிலையில், அவர்களிடம் சிறப்பு அமர்வு ஆலோசனை நடத்தியது.

பின்னர் சிசிடிவி காட்சிப்பதிவு ஆதாரம், தன்னை சந்தித்த லாபியிஸ்டுகள், உச்சநீதிமன்ற 3 முன்னாள் ஊழியர்களுடனான சந்திப்பு ஆகியவை குறித்து, விரிவான விளக்கங்களுடன் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு வழக்கறிஞர் உத்சவ் பெயின்சுக்கு சிறப்பு அமர்வு உத்தரவிட்டது.

மேலும் இந்த விசாரணை இன்று காலை 10.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பெண் ஊழியர் கொடுத்த பாலியல் புகார் குறித்து விசாரித்த மூத்த நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, என்.வி.ரமணா மற்றும் இந்திரா பானர்ஜி ஆகியோரைக் கொண்ட குழு கடந்த செவ்வாய்க்கிழமை அமைக்கப்பட்டது.

இந்த குழு புகாரளித்த பெண் நாளை ரகசிய விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்ட நிலையில், இந்த குழுவே சட்டவிரோதமானது என பெண் வழக்கறிஞர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

மேலும் நம்பத்தகுந்த தனி நபர்களைக் கொண்ட விசாரணைக்குழுவை அமைக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அந்தக் குழு 90 நாட்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும், அதுவரை தலைமை நீதிபதி தனது பொறுப்புகளில் இருந்து விலகியிருக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளன

கருத்துகள் இல்லை: