ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

வெள்ளவத்தையில் பாரிய குண்டுகளுடன் சிக்கிய நபர்கள்


Jeevan Prasad ; வெள்ளவத்தையில் சற்று முன்னர் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாரிய குண்டுகளை கொண்டு செல்லும் வானுடன் அதன் சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமான முறையில் வான் ஒன்றில் வெடிபொருட்கள் கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் பல இடங்களில் குண்டுத்தாக்குதல் இடம்பெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக வெள்ளவத்தையில் வெடிகுண்டு வெடிக்க வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. கொழும்பின் பல பிரதேசங்களில் தாக்குதல் மேற்கொள்ளும் நோக்கில் குண்டுகள் கொண்டு செல்ல திட்டமிட்டிருந்தாக தெரிய வருகிறது. வெள்ளவத்தை ராமகிருஷ்ணா வீதியில் வைத்து குண்டுகளுடன் வான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வான் சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை வெடிபொருட்கள் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்ட வீடு ஒன்று பாணந்துறை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: