ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

திருகோணமலை நண்பனின் மோட்டர் சைக்கிளின் பின்னே அமர்ந்து வெட்டிய தமிழன் . காப்பாற்ற முயற்சித்த கடற்படை... பயனளிக்கவில்லை. வீடியோ .. சி சி டி வி காட்சியாகள்


இல்னகைநெட் : நேற்று முன்தினம் திருமலையில் கொடூரம் ஒன்று நடைபெற்றது. இவ்விடயத்தின் பின்னால் நடத்திருக்கக்கூடாத பல விடயங்கள் நடைபெற்றிருக்கின்றது. ஆனால் மக்கள் பத்தோடு ஒன்று பதினொன்றாக கடந்து செல்ல பழகி விட்டனர்.
இரு நண்பர்கள், காதல் விவகாரம். நண்பனின் உயிரையே எடுக்க துணிந்து விட்டான் நண்பன். நண்பகல் சுமார் பன்னிரண்டு மணி. மோட்டார் சைக்கிளில் நண்பனை ஏற்றிக்கொண்ட அவன் நேரடியாக ஹாட்வெயர் ஒன்றுக்குச் சென்றான். ஹாட்வெயருக்கு செல்வதில் தனிஸ்டனுக்கு சந்தேகம் வரவில்லை. மோட்டார் பைசிக்கிளுக்கு பாதுகாப்புக்கு நின்றான் தனிஸ்டன்.
புதிதாக கத்தி ஒன்றை வாங்கிய நண்பன், தனிஸ்டனிடம் நீ எடு மோட்டார் கைக்கிளை என்று சொல்லிவிட்டு கத்தியுடன் பின் சீற்றில் உட்கார்ந்து கொண்டான். இன்னும் சிறிது நேரத்தில் வாழ்வு முடிகின்றது என்பதை அறிந்திராத தனிஸ்டன் மோட்டார் சைக்கிளை செலுத்தினால், வழியில் ஒரு வளைவு. அங்கே சனநடமாட்டங்கள் குறைவு. சைக்கிளை திருப்புமாறு பணித்தான் நண்பன். அன்புக்கட்டளைக்கு பணிந்து சைக்கிளை திருப்பி சில வினாடிகளில் செருகியிருந்த புத்தம் புதிய கத்தியை எடுத்து பின்புறமாக இருந்து குரல்வளையை அறுத்தான் நண்பன். அது நட்பிற்கான பரிசு.



பாதி அறுந்த குரல்வளையுடன் உயிர்பிச்சை கேட்டு ஓடினான் தனிஸ்டன். கண்டவர்களிடமெல்லாம் என்னை காப்பாற்றுங்கள் என்று மன்றாடினான். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றினுள் ஏறி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு வேண்டினான். மனிதம் மரணித்த பூமியிலிருந்து அந்த சாரதியின் மனம் இரங்கவில்லை. பச்சை ரத்தம் வழியும் அந்த வாலிபனை இறக்கிவிட்டான் அந்த சாரதி. அங்குமிங்கும் ஓடிய தனிஸ்டனுக்கு உயிர்பிச்சை அங்கு கிடைக்குமென்ற நம்பிக்கை வந்தது.

இலங்கை கடற்படை முகாமை நோக்கி ஓடினான். முகாம் வாசலில் மயங்கி விழுந்த தனிஸ்டனை அங்கு நின்ற லெப்டினட் மிலன் விக்கிரமரட்ண தனது ரீசேர்டை களைந்து இரத்தும் ஓடுவதை தடுப்பதற்கு முயற்சித்தவாறு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வைத்தியசாலைக்கு ஓடினார். ஆனால் அப்போது தனிஸ்டனின் உடலிலிருந்து நிறையவே இரத்தும் வெளியேறிவிட்டது. வைத்தியசாலையில் சிறிது நேரத்தில் மூச்சு நின்று விட்டது.

வடகிழக்கிலிருந்து படையினர் வெளியேறவேண்டும் என்று கூக்குரலிடுகின்ற எந்த அரசியல்வாதிகளோ அன்றில் தமிழ் தேசியவாதிகளோ தமிழ் மக்களுக்கு அனர்த்தம் இடம்பெறும்போது கைகொடுப்பதற்கு இல்லை என்பது இந்த ஒற்றைச் சம்பவத்தில்கூட மீண்டுமொருமுறை நிரூபணமாகியுள்ளது.



யாரை வெளியேறு என்று தமிழ்தேசியம் என்ற போர்வைக்குள் ஒழிந்து நிற்கும் அயோக்கியர்கள் வேண்டுகின்றார்களோ அவர்களிடமே இறுதியாக தமிழ் மக்கள் சரணடைகின்றனர்.

தமிழ் மண்ணில் இன்று மனிதாபிமானம் மரணித்து விட்டது. அவ்வாறு அது வாழுமாக இருந்திருந்தால் குறித்த முச்சக்கர வண்டியின் சாரதி தனிஸ்டனை கிழே இறக்கி விட்டு அவனது மரணத்தை பார்த்து ரசித்திருக்க மாட்டான். இருந்தாலும் தமிழ் சமூகம் இதையும் கடந்துதான் செல்லும். நாளை ஒரு உயிரை காப்பாற்ற உதவாத அந்த முச்சக்கர வண்டியில் சவாரி செய்தே தீரும்.

ஆனாலும் ஒரு உயிருக்கு ஆபத்து ஏற்படுகின்றபோது அந்த உயிரை பாதுகாப்பதற்கு ஒவ்வொரு பிரஜையும் முயற்சிக்க வேண்டும் என்ற இலங்கையின் சட்டத்திற்கு, தமிழீழப் போராட்டம் சாவு மணி அடித்தது. அன்று தமிழ் இயக்கங்கள் தமிழ் மக்களை சுட்டுச்விட்டு நடுத்தெருவில் போட்டுச் செல்லும்போது, மூச்சுவிடாது பார்த்து நின்று பழகிய தமிழ் சமூகம் இன்றும் அவ்வாறு ஒரு அச்சுறுத்தல் இல்லாத நிலையிலும் உயிரின் பெறுமதியை உணர மறுக்கின்றது. இன்றுவரை தமிழ் சமூகத்திலிருந்து குறித்த முச்சக்கர வண்டியின் சாரதி சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும் என்ற எந்த வேண்டுதலும் வரவில்லை.

தனது வீரதீரச் செயற்பாடுகள் சீசீரிவி களில் பதிவாகியுள்ளது என்பதை கண்டுகொண்ட கொலையாளி நண்பன் தனது தந்தையாருடன் சென்று பொலிஸில் சரணடைந்துள்ளதுடன் நீதிமன்ற உத்தரவின் பெயரில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளான்.



கருத்துகள் இல்லை: