புதன், 24 ஏப்ரல், 2019

. உலகம் பிறந்தது எனக்காக.. ஓடும் நதிகளும் எனக்காக.. மலர்கள் மலர்வதும்


Karthikeyan Fastura யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனாரின் சொற்கள் ்னும் கொஞ்சம் பின்னாடி போனால் கடலில் வாழும் திமிங்கிலம் கூட நமக்கு சொந்தம் தான். இன்னும் நோண்டுனோம் என்றால் நாற்பதாயிரம் அடி கடலின் உள்ளே வாழும் பிரன்ஹா என்ற ஆதியாதி காலத்து மீன் கூட நம்ம வம்சம் தான். அப்படியே இன்னும் கொஞ்சம் மில்லியன் வருசத்திற்கு போனா.. தாவரத்திற்கும், விலங்கினத்திற்கும் ஒரே தகப்பன் கிடைக்கிறது. அப்படியே இன்னும் கொஞ்சம் மில்லியன் வருடம் போனால் முதல் ஒரு செல் உயிரியை பார்த்துவிடலாம்.
காலையில் ஞாபகம் வந்தது. அறிவியலின் படியும் அதுதான் உண்மை. நாடு, மொழி, இனம், நிறம் என்று பிளவு பட்டிருந்தாலும் 700 கோடி மனிதர்களுக்கும் ஒரு மூதாதையர் தான். அவன் பெயர் ஹோமோசேப்பியன்ஸ். இவனுக்கும் சிம்பன்சிக்கும் ஒரே மூதாதையர். அதன் பெயர் ஹோமிணினி. அதற்கு முன்னாடி நாமளும் கொரில்லா குரங்கும் பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ். அவர்களின் பெயர் அவுரனோபிதெகஸ். இப்படி கொஞ்சம் கொஞ்சமா உள்ளே போக போக டைனோசரஸ் கூட நம்ம சொந்தம் தான். இனனும் கொஞ்சம் பின்னாடி போனால் கடலில் வாழும் திமிங்கிலம் கூட நமக்கு சொந்தம் தான். இன்னும் நோண்டுனோம் என்றால் நாற்பதாயிரம் அடி கடலின் உள்ளே வாழும் பிரன்ஹா என்ற ஆதியாதி காலத்து மீன் கூட நம்ம வம்சம் தான். அப்படியே இன்னும் கொஞ்சம் மில்லியன் வருசத்திற்கு போனா.. தாவரத்திற்கும், விலங்கினத்திற்கும் ஒரே தகப்பன் கிடைக்கிறது. அப்படியே இன்னும் கொஞ்சம் மில்லியன் வருடம் போனால் முதல் ஒரு செல் உயிரியை பார்த்துவிடலாம்.

 
அதையும் நோண்டினால் அமினோஅமிலங்கள் கிடைக்கும். இன்னும் கொஞ்சம் நோண்டினால் காற்றின் மூலக்கூறுகளான ஹைட்ரஜன், ஆக்சிஜன், நைட்ரஜன்,கார்பன் கிடைக்கும். இப்படியே இன்னும் கொஞ்சம் பின்னாடி போனால் அணுக்கள் கிடைக்கும். அது இந்த பூமியின் எல்லாவற்றிலும் நிறைந்திருக்கிறது. சூரிய மண்டலத்தில், பால்வெளி அண்டத்தில், பேரண்டத்தில், பிரபஞ்சத்தில் என்று எங்கும் நிறைந்திருக்கிறது.
இந்த அணுக்களையும் நோண்டினால் நியுட்ரினோ உள்ளிட்ட Sub-Automic Particles கிடைக்கும். அதையும் துளைத்தால் கடவுள் துகள் அல்லது போசன் துகள் கிடைக்கும். அதையும் துளைத்தால் பெருவெடிப்பு நிகழ்ந்தது எப்படி என்பது கிடைக்கும்.
இதையெல்லாம் முழுமையாக படித்தால்
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை- என்று திருவாசகம் சொல்லும்
இறை என்பது அந்த அணுக்களில் உள்ளே இருக்கும் ஆற்றல் தான். அதுவும் நாம தான் நம்ம ப்ரதர் தான். அது எல்லா இடத்திலும் நிறைந்திருக்கிறது எனும்போது
காக்கை குருவி எங்கள் ஜாதி, நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்,
நோக்குங் திசையெலாம் நாமன்றி வேறில்லை
என்பதும் அறிவியல்படி உண்மையே. இதையெல்லாம் மிக ஆழமாக உங்கள் மனதில் உங்கள் பிள்ளைகள் சென்று சேர்த்துவிட்டால் போதும் சாதி, மதம், இனம், மொழி பிரித்து என்று ஒருவரை ஒருவர் அடக்கி ஆண்டுவிடலாம் என்று அடிமுட்டாள்தனமாக வாழாமல் அன்பு கொள்ளலாம். யாரை பார்த்தும், எதனை பார்த்தும் புன்னகைக்கலாம். நம்பிக்கையுடன் வாழலாம். உலகம் பிறந்தது எனக்காக..
ஓடும் நதிகளும் எனக்காக..
மலர்கள் மலர்வதும் எனக்காக.. என்று எல்லாநாளையும் கொண்டாடலாம்.

கருத்துகள் இல்லை: