
இதேபோன்று ஷாங்க்ரிலா, சின்னமன் கிராண்ட் மற்றும் கிங்ஸ்பரி ஆகிய மூன்று 5 நட்சத்திர ஓட்டல்களிலும் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன்பின் நேற்று முன்தினம் பிற்பகல் 2 மணியளவில், கொழும்பு புறநகரில் மிருகக்காட்சி சாலைக்கு அருகே ஒரு குண்டு வெடித்தது. அதில் 2 பேர் பலியானார்கள். கொழும்பு புறநகரான உருகொடவட்டாவில் ஒரு வீட்டில் போலீசார் சோதனை நடத்த நுழைந்தபோது, உள்ளே இருந்தவன் மனித வெடிகுண்டாக மாறி, குண்டு வெடிக்க செய்தான். இதில் 3 போலீசார் பலியானார்கள். இதனால் மொத்தம் 8 இடங்களில் குண்டு வெடிப்புகள் நடந்து இருந்தன.
இந்த
நிலையில், வேனில் இருந்த வெடிகுண்டு ஒன்றை செயலிழக்க செய்யும் முயற்சியில்
போலீசார் நேற்று ஈடுபட்டு இருந்தனர். ஆனால் இந்த முயற்சியில் வெடிகுண்டு
திடீரென வெடித்தது. இதில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இதனால்
கொழும்பு நகரில் மொத்தம் 9 குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடந்துள்ளன.
இதுவரை 310க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த தாக்குதல்களுக்கு எந்தவொரு அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில், இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு இன்று பொறுப்பேற்றுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக