
வசந்தபாலன் இயக்கிய வெயில் படம் மூலம் நடிகையானவர் ப்ரியங்கா. கேரளாவை சேர்ந்த அவர் தொ(ல்)லை பேசி, திருத்தம், செங்காத்து பூமியிலே, வானம் பார்த்த சீமையிலே, தீயோர்க்கு அஞ்சேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இது தவிர அவர் மலையாள படங்கள், தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார். ப்ரியங்காவும், இயக்குனர் லாரன்ஸ் ராமும் காதலித்து கடந்த 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு சென்னையில் வசித்து வந்த ப்ரியங்கா பிரசவத்திற்கு தாய் வீட்டிற்கு சென்றவர் திரும்பி வரவே இல்லை. இதற்கிடையே விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்றார்.
2015ம் ஆண்டு ப்ரியங்கா விவாகரத்து கோரினார். லாரன்ஸ் ராம் தனது சமூக வலைதள பக்கங்களை தவறாக பயன்படுத்தியதாகவும் ஒரு வழக்கு தொடர்ந்தார். ப்ரியங்கா தனது மகன் முகுந்த் ராமுடன் வாமனாபுரத்தில் உள்ள தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திய அவர் மீண்டும் நடிக்கத் துவங்கிவிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக