வெள்ளி, 11 ஜனவரி, 2019

தாயை கட்டிலோடு எரித்த மகள்; தாம்பரத்தில் பரபரப்பு!! தவறான உறவை தட்டிகேட்டதால்

 Daughter who burned her mother with a false relationship
 Daughter who burned her mother with a false relationship Daughter who burned her mother with a false relationshipnakkheeran.in kalaimohan : சென்னை தாம்பரம் அருகே பெற்ற தாயை காதலனுடன் சேர்ந்து மகளே தீவைத்து கொளுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் சானிடோரியத்தை சேர்ந்த பூபதி என்ற 60 வயது பெண்மணி கடந்த ஏழாம் தேதி பகலில் வீட்டில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தபோது தானாக தீப்பற்றி எரிந்ததாக அவரது இளைய மகள் நந்தினி என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பூபதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து குரோம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில் பூபதி உடலில் தானாக தீப்பற்ற என்ன காரணம் என்ற சந்தேகம் அடைந்த போலீசார் நந்தினி மீதும் குற்றச்சாட்டுகள் இருந்ததால் அவரையும் போலீசார் விசாரித்தனர்.
 அந்த விசாரணையில் பூபதியின் இளைய மகளான நந்தினி ஏற்கனவே திருமணமானவர். இவர் திருநீர்மலையை சேர்ந்த முருகன் என்பவர் உடன் தவறான உறவு ஏற்பட்டதால் தாய் பூபதி கண்டித்துள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில்  நந்தினி  மற்றும் முருகன்  ஒன்று சேர்ந்து தாயின் உடலில் தீ வைத்து கொளுத்தி இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து நந்தினி மற்றும் முருகனை போலீசார் கைது செய்தனர். தவறான உறவிற்கு சென்ற மகளை தட்டிக்கேட்ட தாயை தனது காதலனுடன் சேர்ந்து கட்டிலோடு எரித்த எரித்துக் கொலை செய்த மகளின் படுபாதக  செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: