ஞாயிறு, 6 ஜனவரி, 2019

நாடாளுமன்றத்தில் பொய் கூறிய நிர்மலா சீதாராமன் ராஜினாமா செய்ய வேண்டும் - ராகுல் காந்தி வலியுறுத்தல்


தினத்தந்தி :ஹெச்.ஏ.எல். நிறுவனத்துக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஆர்டர் தந்ததாக பாராளுமன்றத்தில் பொய் பேசிய நிர்மலா சீதாராமன் ராஜினாமா செய்ய வேண்டும் என காங். தலைவர் ராகுல் வலியுறுத்தியுள்ளார்.

புதுடெல்லி: பாராளுமன்றத்தின் மக்களவையில் ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான விவாதத்தில் பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். அப்போது அவர், ரபேல் விவகாரத்தில் உண்மைகளை கண்டு காங்கிரஸ் அஞ்சுகிறது. தற்போது காங்கிரஸ் அமளியில் ஈடுபடுவது உண்மைகளை மறைப்பதற்காகவே. நாட்டின் பாதுகாப்பிற்கு மட்டுமே பாஜக அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது. ஹெச்.ஏ.எல். நிறுவனத்துக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஆர்டர் தந்துள்ளோம் என தெரிவித்தார். இந்நிலையில், ஹெச்.ஏ.எல். நிறுவனத்துக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஆர்டர் தந்ததாக பாராளுமன்றத்தில் பொய் பேசிய நிர்மலா சீதாராமன் ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், பாராளுமன்றத்தில் பேசிய பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் ஹெச்.ஏ.எல். நிறுவனத்துக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் ஆர்டர் தந்துள்ளோம் என தெரிவித்தார். ஆனால், இதுவரை எந்த ஒரு ஆர்டரும் பெறப்படவில்லை. எனவே, பாராளுமன்றத்தில் பேசிய பாதுகாப்பு துறை மந்திரி ஆர்டர் தந்ததற்கான ஆதாரங்களை காட்ட வேண்டும். இல்லையேல் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்

கருத்துகள் இல்லை: