
அதை புகழ்ந்த இந்து ஏடு “Progressive and Meaningful” அறிவிப்பு என்று தலையங்கம் தீட்டியது.
பொங்கி எழுந்தன திமுகவும் திகவும்!
நாடெங்கும் கண்டனக் கூட்டங்கள், மாநாடுகள். தி.மு.க., காங்கிரஸ், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.எம். அல்ல), முஸ்லிம் லீக், ஜனதா கட்சித் தலைவர்கள் எல்லாம் ஒருங்கிணைக்கப்பட்டனர். தமிழர் தலைவர் தலைமையில் வருமான வரம்பு அரசு ஆணையின் நகலைக் கொளுத்தி அந்தச் சாம்பலை கோட்டைக்கு அனுப்பினர் திராவிடர் கழகத் தொண்டர்கள் (26.11.1979), அனல் பறந்த காலகட்டத்தில் மக்களவைத் தேர்தல் வந்தது.. அதுவரை தேர்தலில் தோல்விகளையே கண்டறியாத எம்.ஜி.ஆர். முதன் முதலாக மிகப் பெரும் தோல்வியைச் சந்திக்க நேரிட்டது. புதுவை உள்ளிட்ட 40 இடங்களில் போட்டியிட்டு 38 இடங்களில் தோல்வியைத் தழுவினார்,
டார்வின் நாகேந்திரன் : எம்.ஜி.ஆர் அவர்கள் இதே பொருளாதார ரீதியின் இட ஒதுக்கீட்டின் வடிவமான கிரிமிலேயர் எனும் கிருமியை 1980 ல் கொண்டு வந்தார்,அது அன்றைய தேதியில் பிற்படுத்தபட்ட மக்களின் மேலான பேரிடியாக பார்க்கப்பட்டது,அதன் விளைவுகள் குறித்து தலைவர் கலைஞர்,ஆசிரியர் வீரமணி இருவரும் சூறாவளியாய் சுழன்று மக்கள் முன் எடுத்து வைத்தார்கள்,அதன் காரணமாக தொடர்ந்து வந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 39 இடங்களில் கோபி,சிவகாசி என்ற இரு இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது 37ல் தோல்வியை தழுவியது,,தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்தார்
எம். ஜி.ஆர் அவருக்கு அப்போதுதான் புரிந்தது சமூகநீதியின் வீரியம்.ஆசிரியர் வீரமணியிடம் ஆலோசனை கேட்டார்,பின்னர் 31 % இருந்த பிற்படுத்தபட்டோர் இட ஒதுக்கீட்டை 50% மாற்றி ஆணையிட்டார்.எனவே பின்னர் வந்த சட்டமன்ற தேர்தலில் வென்றார்,ஆசிரியர் வீரமணி விளையாட்டாக இப்படி சொல்வார்'எம்.ஜி.ஆரின் கோபம் நமக்கெல்லாம் லாபம்'.இப்படி இட ஒதுக்கீடு சமூகநீதியின் நியாயத்திற்கு முன் பெரும் மக்கள் செல்வாக்கே மண்டியிட்டுள்ளது கடந்த கால வரலாறு,வரலாற்றில் பாடம் கற்றுக்கொள்வதே நல்ல அரசியல்வாதிக்கு அழகு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக