சனி, 12 ஜனவரி, 2019

நாடாளுமன்ற தேர்தல் மாயாவதி, அகிலேஷ் ள் கூட்டணி- தலா 38 தொகுதிகளில் போட்டி

பாராளுமன்றத் தேர்தலில் மாயாவதி, அகிலேஷ் கட்சிகள் கூட்டணி- தலா 38 தொகுதிகளில் போட்டிமாலைமலர் : பாராளுமன்றத் தேர்தலில் மாயாவதி மற்றும் அகிலேஷ் யாதவின் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் எதிரும் புதிருமாக இருந்த சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் இப்போது பாஜகவை வீழ்த்துவதற்காக பாராளுமன்றத் தேர்தலில் கைகோர்த்துள்ளன.
இது தொடர்பான சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணியை இறுதி செய்தனர். இந்நிலையில் மாயாவதியும் அகிலேஷ் யாதவும் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூட்டணி தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர்.


உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலா 38 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாகவும், அமேதி மற்றும் ரேபரேலியில் போட்டியில்லை என்றும் மாயாவதி கூறினார். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் வறுமை, வேலையின்மை மற்றும்  ஊழல்கள் பெருகியதால் அந்த கட்சியை தங்கள் கூட்டணியில் சேர்க்கவில்லை என்றும் மாயாவதி கூறினா

கருத்துகள் இல்லை: