வியாழன், 10 ஜனவரி, 2019

மெரினா புரட்சி திரைப்படம்: சென்ஸார் போர்டுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

THE HINDU TAMIL : மெரினா புரட்சி படத்தை வெளியிட  அனுமதிப்பது
தொடர்பாக   மத்திய சினிமா தணிக்கை வாரியம் ஒரு வாரத்தில் பரிசீலித்து முடிவெடுக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மெரினா புரட்சி படம்   தயாரிக்கப்பட்டு 90 நாட்களாகியும் தணிக்கைக்கு முறையாக  உட்படுத்தபடாமல் உள்ளதாகவும், இரண்டு முறை நிராகரிக்கப்பட்டமைக்கு  இதுவரை எந்த காரணமும் சொல்லப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வருகின்ற பொங்கல் திருநாள் அன்று திரைப்படத்தினை தணிக்கை செய்து  வெளியிட  உத்தரவிடவேண்டும் என திரைப்படத்தின் இயக்குநர்  மற்றும் தயாரிப்பாளர் ராஜ் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், 2 முறை தணிக்கை உட்படுத்தப்பட்டு நிராகரிப்பட்ட நிலையில்   நிராகரிப்பதற்கான காரணம் முறையாக தெரிவிக்கவிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. உண்மை சம்பவத்தின் அடிப்படையில் தான் படம் எடுக்கப்ட்டுள்ளதாகவும் வாதிட்டனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம்  மனுதாரர் தன்னிடம் உள்ள ஆவணங்களை இரண்டுநாளில் சமர்பிக்க வேண்டும், அதை பரீசிலித்து  மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் ஒரு வாரத்திற்குள் படத்தை  வெளியிட அனுமதிப்பது குறித்து முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை: