ஞாயிறு, 6 ஜனவரி, 2019

நெய்வேலி சுரங்க விரிவாக்கம்: 26 கிராமங்களுக்கு ஆபத்து! விடியோ


மின்னம்பலம் : நெய்வேலியில் மூன்றாவது சுரங்கத்தை அமைக்கும் திட்டம் கைவிடப்படாது என்று தமிழக தொழிற்துறை அமைச்சர் எம்.வி.சம்பத் தெரிவித்துள்ளார்.
நெய்வேலி மூன்றாவது நிலக்கரி சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக 26 கிராமங்களில் நில எடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடலூரில் இன்று (டிசம்பர் 6) பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக தொழிற்துறை அமைச்சர் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சம்பத், “நெய்வேலி என்.எல்.சி.யின் மூன்றாம் சுரங்கம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்துதல் விவகாரம் மாவட்டத்திலேயே மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. இதுபற்றி எல்.எல்.சி நிர்வாகத்திடம் முதலமைச்சர், தலைமை செயலாளர் ஆகியோர் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். பேச்சுவார்த்தைக்கு பிறகு நில எடுப்பு விவகாரத்தில் நல்ல தீர்வு கிடைக்கும்.

மூன்றாவது சுரங்கம் விரிவாக்கத் திட்டத்தை கைவிட வாய்ப்பே இல்லை. அங்கு வசிப்பவர்களுக்கு மாற்று குடியிருப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். பொதுமக்கள் இத்திட்டத்தை கைவிடவேண்டும் என கூறுகிறார்களே என்று அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு அவர், “மக்கள் கூறுகிறார்கள்தான். ஆனால் என்.எல்.சி இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனம். என்.எல்.சி நிறுவனம் லாபத்தில் இயங்கும் நிறுவனமாக உள்ளது. லாபத்தை எடுத்து மற்ற மாநிலங்களில் முதலீடு செய்யக்கூடாது, தமிழகத்திலேயே பயன்படுத்த வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தியுள்ளோம்” என்று பதிலளித்தார்.

கருத்துகள் இல்லை: