

1950- 70 கள்வரை ஒவ்வொரு திரைப்படமும்
வெளியாகும் வேளையில் தயாரிப்பாளர்கள்

மயில்வாகனனின் தயவை நாடினார்கள். காலை 8 மணிக்கு கொழும்பிலிருந்து விமானத்தில் புறப்பட்டு சென்னைவந்து, பாட்டுக்களைப் பெற்றுக்கொண்டு, சென்னையில் மதிய போசனத்தை முடித்து, மாலை 4 மணிக்கு மீண்டும்
கொழும்பு திரும்புவார் மயில்வாகனன். மாலை 6 மணிக்கு அந்த புதிய பாடல்கள் அன்றைய தினம் ஒலிபரப்பாகும். இது, அந்தக் காலத்தில் மயில்வாகனனின் மாமூலான
செயல்பாடாகவிருந்தது.
விளைவு, புதிய திரைப்படத்துக்கு கூட்டம் அலைமோதும்.
பாடல்கள் மூலமாகமட்டுமல்லாமல், நடிகர்கள், பின்னணி கலைஞர்கள், இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள் போன்றவர்களுடன் பல்வேறுவிதமான நேரடி நிகழ்ச்சிகளை ஏற்படுத்தியும் இலங்கை வானொலி தன் செல்வாக்கைப் பெருக்கியது.
உலகில் எந்த வானொலி நிலையத்திலுமே இல்லாத அளவில், ஒரு லட்சத்துக்கும் அதிகமான சிங்கள, தமிழ், ஆங்கில பாடல்களின் இசைத்தட்டுக்களை இலங்கை வானொலி பொக்கிஷமாகக்கொண்டுள்ளது.
1920-30களில் வெளியான, மிகவும் அரிதான 78 rpm இசைத்தட்டுக்கள் உள்பட! ,
Subramaniam Mahalingasivam : திருமதி ஞானம் இரத்தினம், இலங்கை வானொலியிலே நீண்டகாலம் அதன் கல்விச்
சேவையில் பணியாற்றி, பின்னர் தமிழ் நிகழ்ச்சிகள் தயாரிப்பாளராகவும், தமிழ்
சேவையின் உதவிப் பணிப்பாளராகவும் பணியாற்றியவர்.
`Green Light' என்று, அவர் தன்னுடைய வானொலி அநுபவங்களை - அக்காலத்து நினைவுகளை, நூலாக வெளியிட்டிருக்கிறார்.
1957ஆம் ஆண்டு இந்தியா வந்தபோது, அகில இந்திய வானொலியின் சென்னை நிலையத்துக்கு தாம் சென்றதை அவர் அந்த நூலிலே குறிப்பிடுகிறார்.