கடந்த
சில நாட்களாக அதிமுகவில் ஓபிஎஸ் அணி மற்றும் சசிகலா அணி என 2 அணிகளாகப்
பிரிந்து உட்கட்சி பிரச்சனை ஏற்பட்டது. இதனால் முதல்வராக யார் பதவியேற்பது
என குழப்பங்கள் நிலவிவந்தது.
இதனையடுத்து,
எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தின் அடிப்படையில், முதல்வராக பதவியேற்க
எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். பின் எடப்பாடி
பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவைக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.
ஆனால், 15 நாட்களுக்குள் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் எனத்
தெரிவித்திருந்தார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்.
அவ்வாறு
பெரும்பான்மையை நிரூபிக்க சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நேற்று கூடியது.
இதில், ரகசிய வாக்கெடுப்பு கோரி திமுக எம்எல்ஏக்கள் ரகளையில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து 2 முறை ஒத்திவைக்கப்பட்டு துவங்கிய பேரவைக்கூட்டத்தில் மைக்குள்,
மேஜைகள் உடைக்கப்பட்டன.
தொடர்ந்து
ரகளையில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏக்களை குண்டுக்கட்டாக அவைக்காவலர்கள்
வெளியேற்றினர். அப்போது காலர்களுக்கும் திமுக எம்எல்ஏக்களுக்கும்
தள்ளுமுள்ளு ஏற்பட்டு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டைகள்
கிழிக்கப்பட்டன.
இதனைக் கண்டித்து,
ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் மெரீனா கடற்கரையில் போராட்டத்தில்
ஈடுபட்டனர். இதனையடுத்து, அனைவரும் கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில்,
எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக நியமித்ததை எதிர்த்து போராட சென்னை
மெரீனாவில் மீண்டும் அறப்போராட்டத்தை துவங்க வாட்ஸ்அப் குழுக்கள் மூலம்
மாணவர்கள் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதில்,
சென்னை மெரினா, கோவை வ.உ.சி மைதானத்தில் மதியம் 2 மணிக்கும், மதுரை
தமுக்கம் மைதானத்தில் மாலை 3 மணிக்கும் அறப்போராட்டம் நடைபெறும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அழைப்பால்
மாணவர்களும், இளைஞர்களும் சென்னை மெரினா உள்ளிட்ட அறப்போராட்டத்தில்
ஏராளமானோர் இன்று கலந்துகொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால்
மீண்டுமொரு மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் எனவும் கூறப்படுகிறது. லைவ்டே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக