சனி, 23 ஆகஸ்ட், 2014

திமுகவின் உட்கட்சி பூசல் முடிவுக்கு வருகிறது ?

அழகிரியின் தீவிர ஆதரவாளரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான, கே.பி.ராமலிங்கம், சென்னையில், நேற்று முன்தினம் இரவு, தி.மு.க., தலைவர் கருணாநிதியை, சி.ஐ.டி., காலனியில் உள்ள வீட்டில் சந்தித்துப் பேசினார்.கட்சியை விட்டு நீக்கப்பட வேண்டியவர்கள் என, தயாரிக்கப்பட்ட, 33 பேர் பட்டியலில், முக்கியமான இடத்தில் இருந்தவர், கே.பி.ராமலிங்கம். அவர் மீதான நடவடிக்கை கைவிடப்பட்ட நிலையில், நீண்ட நாட்களுக்கு பின், கருணாநிதியை அவர் சந்தித்துப் பேசி உள்ளார். சொல்லப்படவில்லைகட்சி பொருளாளர் ஸ்டாலின், ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, கரூர் சென்றுள்ள நிலையில், சென்னையில் இந்த திடீர் சந்திப்பு நடந்துள்ளது. அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்ப்பதற்கு, எதிர்ப்பு தெரிவித்து வரும் ஸ்டாலினுக்கு, இந்த சந்திப்பு பற்றிய எந்த தகவலும் சொல்லப்படவில்லை என்பது, குறிப்பிடத்தக்கது.   இவிங்க  இன்னா  கச்சி n
லோக்சபா தேர்தலில், தி.மு.க., படுதோல்வி அடைந்ததை அடுத்து, கட்சி யில் களையெடுப்பு நடவடிக்கை துவங்கியது. அதற்காக அமைக்கப்பட்ட, ஆறு பேர் குழு பரிந்துரைகளின் படி, முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன், கட்சியை விட்டே நீக்கப்பட்டார். முன்னாள் அமைச்சர் பழனி மாணிக்கம், பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அவர்களுடன் சேர்ந்து, அழகிரியின் தீவிர ஆதரவாளர், கே.பி.ராமலிங்கமும் நீக்கப்படுவார் என, எதிர்பார்க்கப்பட்டது.விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பிய கட்சித் தலைமைக்கு, பதிலளித்த ராமலிங்கம், ஸ்டாலின் மீது குற்றம் சாட்டியிருந்தார். அந்த கோபத்தில், ராமலிங்கத்தை கட்சியை விட்டே நீக்க வேண்டும் என்று, ஸ்டாலின் கடுமையாக வலியுறுத்தினார்.

அதை, கருணாநிதி ஏற்க மறுத்து விட்டார். அப்போதே அழகிரியுடன், நாளை சமரசம் செய்து கொள்ள வேண்டிய நிலை வந்தால், அதற்கு ராமலிங்கம் தான், பொருத்தமாக இருப்பார் என்பதால் தான், இவரை நீக்க, கருணாநிதி மறுத்து விட்டார் என, கூறப்பட்டது.அதை உண்மையாக்கும் விதத்தில், சென்னையில், நேற்று முன்தினம் இந்த சந்திப்பு நடந்துள்ளது. சென்னை, சி.ஐ.டி., காலனியில் உள்ள வீட்டில், நேற்று முன்தினம் இரவு, 8:30 மணிக்கு, கருணாநிதியை ராமலிங்கம் சந்தித்துப் பேசியுள்ளார். இருவரும், அரைமணி நேரம் பேசியதாக, தி.மு.க., வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த சந்திப்பு நடந்த நேரத்தில், அழகிரி சென்னையில் தான் இருந்தார். போயஸ் தோட்டத்தில் உள்ள, அவரது மகன் துரை தயாநிதி வீட்டில் இருந்த அழகிரியை, நேற்றிரவே, கே.பி.ராமலிங்கம் சந்தித்து உள்ளார். கருணாநிதியிடம் பேசியதையும், அவர் கூறி அனுப்பிய தகவலையும், அழகிரியிடம், ராமலிங்கம் தெரிவித்தார். இந்த சந்திப்புகள் நடப்பதற்கு முன், அழகிரியின் மகன் தயாநிதி, கருணாநிதியை சந்தித்து உள்ளார். அப்போது, அழகிரியை மீண்டும் தி.மு.க.,வில் சேர்ப்பது குறித்து பேசப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, தி.மு.க., வட்டாரத்தில் தெரிவிக்கப்படும் தகவல்கள் வருமாறு:கருணாநியை சந்தித்த அழகிரி மகன், தன் அப்பாவை சந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு உள்ளார். அதற்காக, தன் போயஸ் கார்டன் வீட்டுக்கு வரும்படி, கருணாநிதியை அழைத்து உள்ளார். 'என்னை போயஸ் கார்டன் வரச்சொல்றீயா' என்று, கிண்டலாக கேட்டு, கருணாநிதி சிரித்துள்ளார்.ஆனாலும், தயாநிதியின் அழைப்பை கருணாநிதி ஏற்றுக் கொண்டுள்ளார். கருணாநிதியை சந்திக்க, கோபாலபுரம் வீட்டுக்கு அழகிரி வந்தால், அது வெளியில் தெரிந்து விடும். எனவே, போயஸ் கார்டன் வீட்டில் சந்திப்பதற்கான ஏற்பாடுகள், நடந்து வருவதாக தெரிகிறது.

திரும்புவதற்குள்...:

இதற்கிடையில், கருணாநிதியின் மகள் செல்வி வீட்டில், ஒரு சந்திப்பு நடந்துள்ளது. கருணாநிதியின் மனைவியும், அழகிரியின் தாயாருமான தயாளு, செல்வி வீட்டுக்கு சென்று உள்ளார். அங்கே அவரை அழகிரி பார்த்துப் பேசி உள்ளார்.அதன் பிறகே, கே.பி.ராமலிங்கத்தை சந்திக்க, கருணாநிதி சம்மதித்து உள்ளார். இப்போது, கருணாநிதியின் அழைப்புக்காக, அழகிரி சென்னையில் காத்திருக்கிறார். ஸ்டாலின் சென்னை திரும்புவதற்குள், இந்த சந்திப்பு நடக்க லாம் என, தெரிகிறது.இவ்வாறு, தி.மு.க., வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

- நமது சிறப்பு நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை: