செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

Delhi Oberoi ஹோட்டலில் ஊழியர்களாலேயே பெண் பாலியல் பலாத்காரம் ! Gang rape by staff !

புதுடெல்லி டெல்லியின் தென்கிழக்கு பகுதியான ஹஸ்ரத் நிசாமுதீனில், 5 நட்சத்திர ஓட்டல் ஒன்று உள்ளது. இந்த ஓட்டல் உரிமையாளரின் தாய் நோயால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் அவர் ஓட்டலில் வைத்தே 24 மணி நேரமும் கவனிக்கப்பட்டு வருகிறார். இந்த பணியை அங்குள்ள பிரபல மருத்துவமனை நிர்வாகம் செய்து வருகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவில், நோயாளியை பார்ப்பதற்காக 28 வயதுடைய நர்சு ஒருவர் ஓட்டலுக்கு சென்றார். அவர் நோயாளியை பார்த்து விட்டு திரும்பி வந்த போது, அந்த ஓட்டலில் பணிபுரியும் வாலிபர்கள் 2 பேர் நர்சை வழிமறித்தனர். பின்னர் அங்குள்ள ஊழியர் குடியிருப்புக்கு அவரை வலுக்கட்டாயமாக தூக்கிச்சென்ற அவர்கள், அங்கு அவரை மாறி மாறி கற்பழித்தனர்.

இந்த சம்பவம் குறித்து நேற்று போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்ட நீரஜ், ராஜன் என்ற அந்த 2 வாலிபர்களையும் கைது செய்தனர். dailythanthi.com

கருத்துகள் இல்லை: