ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

கொள்ளிகட்டைய எடுத்து தலையை சொரிந்த முட்டாள்கள்/அடிமைகள் நாமதாய்ன் !

அம்மா இந்த மூணு வருஷத்துல என்ன என்ன குடுத்துச்சு ( தன்னோட காசுல இல்லப்பா..மக்கள் வரி பணத்துல தன்னோட பேர போட்டோவை போட்டு ).... மாடு குடுத்துச்சு...கம்பூட்டர் குடுத்துச்சு ..உப்பு குடுத்துச்சு...காய்கறி குடுத்துச்சு... சோறு குடுத்துச்சு..மசாலா முட்டை குடுத்துச்சு...சினிமா தியேட்டர் குடுத்துச்சு...ஓட்டுக்கு பணம் குடுத்துச்சு... கூடவே குடிக்க சாராயமும் பிரியாணியும் குடுத்துச்சு... இலவசமா குடுக்க வேண்டிய குடி தண்ணிய 10 ரூபா சொல்லி குடுத்துச்சு... மருந்து மாத்திரை குடுத்துச்சு... ஆனா அம்மா குடுக்க மறந்தது என்ன என்ன.... சிறந்த தொழில் துறைகள் ...அனைவருக்கும் தடை இல்லாத மின்சாரம்...சிறந்த போக்கு வரத்து..... தரமான சாலைகள்,.. மக்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்பு.... சிறந்த கல்விக்கூடங்கள் அவற்றில் தரமான கல்வி ...நதிநீர் சேமிப்பு அதன் மூலம் விவசாயத்தை பெருக்கி உணவு பொருட்களின் விலைவாசியை கட்டு படுத்துதல்... குப்பை கூளங்கள் அற்ற நகரங்கள் ... லஞ்சம் ஊழல் அற்ற அரசுத்து துறைகள்... சிறந்த நிர்வாகம்... மக்களின் தேவை அறிந்து அதற்க்கான திட்டங்கள் தீட்டி அவற்றை செயல் படுத்துதல்....ஒரு சில குறிப்பிட்ட துறைகளில் மட்டும், இலவசம், விலை இல்லா மற்றும் மானியங்களை குறைத்து குறைந்த செலவில் வழங்குதல், ஆரோக்கியமான அரசியல் .. ...இன்னும் நிறைய....நடக்குமா... மூணு வருஷத்துக்கும் மேல ஆச்சு... இந்த மாதிரி திட்டங்கள் எதுவும் நடந்த மாதிரி தெரியல...இனிமேலும் நடக்குரமாதிரியும் தெரியல... தலை அரிக்குதுன்னு கொள்ளிகட்டையை எடுத்து நாமதான் சொரிஞ்சு கிட்டோம்... ஒன்னும் பிரச்சனை இல்லை... மசாலா முட்டை போட்டவங்களுக்கு நம்மாலும் அழுகுன முட்டை போடமுடியும்.... ஆனா அதுக்கு இன்னும் ரெண்டு வருஷம் இருக்கு.suresh SUBBU - Delhi,இந்தியா

..dinamalar.com

கருத்துகள் இல்லை: