புதன், 20 ஆகஸ்ட், 2014

காதல் சந்தியாவின் கலகலப்பு அவதாரம் !

காமெடி நடிகர்களுக்கு ஜோடி போடுகிறார் சந்தியா. காதல் படத்தில் பரத் ஜோடியாக ஹீரோயினாக அறிமுகமானவர் சந்தியா. இதையடுத்து ஒன்றிரண்டு படங்களில் ஹீரோயின் வேடத்தில் வந்தாலும் அதை தக்க வைக்க முடியவில்லை. வாய்ப்பு வரும் என்று காத்திருந்தவருக்கு 2வது ஹீரோயின் வேடங்களே வந்தன. இதனால் ஒரு வருடத்துக்கும் மேல் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். இடையில் ஒன்றிரண்டு மலையாள படங்களில் தலைகாட்டினார். கோலிவுட்டில் சந்தியாவுக்கு யாரும் கைகொடுக்க முன்வராததால் அவர் ஒதுங்க வேண்டிய சூழல் உருவானது. பிறகு விழித்துக்கொண்டவர் மெதுவாக செகண்ட் ஹீரோயின் வேடத்துக்கு சம்மதித்தார். பின்னர் பிடிவாதத்தை தளர்த்திக்கொண்டு காமெடி நடிகர்களுக்கு ஜோடிபோடவும் தலை அசைத்தார். ‘யா யாÕ என்ற படத்தில் சந்தானத்தின் ஜோடியாக நடித்தார். < தற்போது குத்தாட்டத்துக்கு தயாராகி விட்டார். நரேன் நடிக்கும் ‘ஜின்ஜர்Õ என்ற படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடுகிறார். இதில் ஹீரோவாக நரேன் நடித்தாலும் சந்தியாவின் பாடல் காட்சியில் ஒரு சீன் கூட நரேன் வரவில்லையாம். பாடல் முழுக்க ஆட்டம் போடுவது பரோட்டா சூரிதான். முதலில் சூரி கொஞ்சம் வெட்கப்பட்டார். நான் உங்கள் ரசிகை என்று அவருக்கு ஐஸ் வைத்து சகஜ நிலைக்கு கொண்டு வந்த சந்தியா பிறகு அவருடன் சேர்ந்து செம குத்தாட்டம் போட்டார். - tamilmurasu.org/

கருத்துகள் இல்லை: