புதன், 20 ஆகஸ்ட், 2014

ஜெகன் மோகனின் ரூ.863 கோடி சொத்துகளை முடக்க உத்தரவு !

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, அவரது கூட்டாளிகளின் ரூ.863 கோடி மதிப்பிலான சொத்துகளை தில்லி சிறப்பு நீதிமன்றம் முடக்கியுள்ளது.
ஆந்திர முதல்வராக ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி இருந்தபோது, வடரேவு பகுதியிலும் நிஜாம்பட்டினம் தொழிற்பேட்டை பகுதியிலும் உள்ள ஜெகன் மோகன் மற்றும் அவரது வர்த்தகக் கூட்டாளி நிம்மகட்ட பிரசாத் ஆகியோரின் நிறுவனங்களுக்கு மாநில அரசு முறையற்ற வகையில் சலுகை காட்டியதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
இதையடுத்து, இந்த வழக்கில் தொடர்புடைய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக அமலாக்கத்துறை கடந்த 2012இல் குற்றவியல் விசாரணையைப் பதிவு செய்தது. பாருங்க ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரி இருந்து கிட்டு இவன் அடித்த கொள்ளை ! இவன் அப்பன் இவனை விட பெரிய நடிகன் ஆனா என்ன ஹெலிகாப்டர்ல பூட்டு கிட்டாய்ன் .

அதையடுத்து அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில், இவ்விவகாரத்தில் பிரதிபலன் முதலீடு செய்யப்பட்டிருப்பதையும் சட்டவிரோதமாக பணம் கைமாறியதையும் கண்டறிந்தது. எனவே, ஜெகன் மற்றும் அவரது வர்த்தகக் கூட்டாளிகளின் ரூ.863 கோடி மதிப்பிலான சொத்துகளைப் பறிமுதல் செய்வதற்காக அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இவ்வழக்கை விசாரித்து வரும் தில்லியில் உள்ள சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைத் தடுப்பு சிறப்பு நீதிமன்றம், அமலாக்கத்துறையின் பறிமுதல் உத்தரவை உறுதிப்படுத்தியுள்ளது. dinamani .com

கருத்துகள் இல்லை: