வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

மோடி விழாக்களை புறக்கணிக்க காங்கிரஸ் முதல்வர்கள் முடிவு !

பிரதமர் நரேந்திர மோடி | கோப்புப் படம் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற் கும் கூட்டங்களைப் புறக்கணிக்க காங்கிரஸ் முதல்வர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த முடிவு அரசியல் சாசன மரபுமீறல் என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
ஹரியாணா மாநிலம் கைத்தலில் கடந்த 19-ம் தேதி நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் நரேந்திர மோடியும் அந்த மாநில காங்கிரஸ் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவும் பங்கேற்றனர்.
விழாவில் பூபிந்தர் சிங் ஹூடா பேசியபோது கூட்டத்தில் ஒரு பகுதியினர் “மோடி, மோடி” என்று கோஷமிட்டு அவரை பேசவிடாமல் தடுத்தனர். இதனால் அதிருப்தி அடைந்த ஹூடா, பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டங்களில் இனிமேல் பங்கேற்க மாட்டேன் என்று பகிரங்கமாக அறிவித் தார்.

பிருத்விராஜ் சவாண் அதிருப்தி
மகாராஷ்டிர மாநிலம் சோலாப் பூரில் சமீபத்தில் நடந்த அரசு விழாவில் பிரதமர் மோடியும் மாநில காங்கிரஸ் முதல்வர் பிருத்விராஜ் சவாணும் கலந்து கொண்டனர். இதில் முதல்வர் பிருத்விராஜ் சவாண் பேசியபோது மோடியின் ஆதரவாளர்கள் கோஷமிட்டு இடையூறு செய்தனர்.
இந்த சம்பவங்களைத் தொடர்ந்து மோடி பங்கேற்கும் கூட்டங்களை தவிர்க்குமாறு காங்கிரஸ் முதல்வர்களுக்கு அந்தக் கட்சித் தலைமை வாய் மொழியாக உத்தரவிட்டி ருப்பதாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் வியாழக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் மோடியுடன் பங்கேற்பதை பிருத்விராஜ் சவாண் தவிர்த்துவிட்டார்.
தற்போது 11 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநிலங்களில் நடைபெறும் அரசு விழாக்களில் மோடி பங்கேற்கும்போது மாநில முதல்வர்கள் புறக்கணிப்பார்கள் என்று காங்கிரஸ் மேலிட வட்டாரங்கள் தெரிவித் துள்ளன.
மேலும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடக்கும் மாநிலங் களிலும் மோடியை புறக்கணிக் குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டி ருப்பதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
ஹேமந்த் சோரன் ஆவேசம்
ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடியும் முதல்வர் ஹேமந்த் சோரனும் ஒரே மேடையில் பங்கேற்றனர். அப்போது முதல்வர் ஹேமந்த் சோரனை பேசவிடாமல் மோடியின் ஆதரவாளர்கள் கோஷ மிட்டனர்.
இதனால் ஆவேசமடைந்த சோரன் நிருபர்களிடம் கூறிய போது, இனிமேல் மோடியுடன் ஒரே மேடையில் பங்கேற்க மாட்டேன். பாஜகவினரின் நடவடிக்கை அநாகரிகமானது என்று குற்றம் சாட்டினார்.
காங்கிரஸ் குற்றச்சாட்டு
காங்கிரஸ் பொதுச்செயலாளர் அம்பிகா சோனி கூறும்போது, ‘‘காங்கிரஸ் முதல்வர்களை அவமரியாதை செய்யும் வகையில் பாஜகவினர் திட்டமிட்டு செயல்படுகின்றனர். இது அரசியல் சாசன அமைப்பை சீர்குலைக்கும் வகையில் உள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களையும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களையும் மத்திய அரசு வேறுபடுத்திப் பார்க்கிறது’’ என்றார்.
மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் மாணிக் தாக்கரே கூறிய போது, மோடியின் கூட்டத்தை முதல்வர் பிருத்விராஜ் சவாண் புறக்கணித்தது சரியான நடவடிக் கைதான் என்று தெரிவித்தார்.
பாஜக பதிலடி
இந்த விவகாரம் குறித்து பாஜக மூத்த தலைவர் ஷாநவாஸ் ஹுசைன் கூறும்போது, ‘‘நாட்டின் மிகவும் பிரபலமான பிரதமர் நரேந்திர மோடி. அதனால் அவர் பங்கேற்கும் கூட்டங்களில் மக்கள் அலைமோதுகின்றனர். மக்களின் மனஓட்டத்தை யாராலும் தடுக்க முடியாது. அதற்காக பிரதமரின் கூட்டத்தைப் புறக்கணிப்பது அரசியல் சாசன மரபுமீறல் ஆகும்’’ என்றார்.
பாஜகவின் மற்றொரு மூத்த தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறியபோது, காங்கிரஸ் முதல்வர் களின் அறிவிப்பு எதிர்மறை அரசியலை வெளிப்படுத்துகிறது. பிரதமர் மோடியை காங்கிரஸ் முதல்வர்கள் புறக்கணிக்கலாம். ஆனால் அவரது நல்லாட்சி, வளர்ச்சித் திட்டப் பணிகளை யாராலும் புறக்கணிக்க முடியாது என்றார்./tamil.thehindu.com

கருத்துகள் இல்லை: