வியாழன், 21 ஆகஸ்ட், 2014

9 குழந்தைகளை கடத்தி கொன்ற அக்காள்–தங்கையை தூக்கில் போட தற்காலிக தடை !

மும்பை
9 குழந்தைகளை கடத்தி கொலை செய்த வழக்கில் கோலாப்பூரை சேர்ந்த அக்காள் – தங்கையை தூக்கில் போட தற்காலிக தடை விதித்து மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
9 குழந்தைகள் கொலை மராட்டிய மாநிலம் கோலாப்பூரை சேர்ந்த அக்காள்– தங்கை ரேணுகா (வயது 45), சீமா (39). இவர்கள் குழந்தைகளை கடத்தி, பிச்சை எடுக்க வைத்து அதில் வரும் வருமானத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். இதற்காக 13 குழந்தைகளை கடத்தி பிச்சை எடுக்க வைத்தனர். பிச்சையெடுக்க மறுத்த காரணத்துக்காக 9 குழந்தைகளை ஈவு–இரக்கமின்றி படுகொலை செய்தனர். இந்த மிருகங்களை சீக்கிரம் தூக்கில போடுங்கப்பா

இந்த சம்பவத்துக்கு சகோதரிகளின் தாய் அஞ்சனா காவித், ரேணுகாவின் கணவர் கிரண் ஷிண்டே ஆகியோரும் உடந்தையாக இருந்தனர்.
தூக்கு தண்டனை இது தொடர்பாக அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து, கோலாப்பூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது அஞ்சனா காவித் இறந்து விட்டார். மேலும் கிரண் ஷிண்டே அப்ரூவராக மாறியதால், அவரை கோர்ட்டு விடுவித்தது.
ஆனால் அக்காள்– தங்கையான ரேணுகா, சீமா ஆகிய இருவருக்கும் தூக்கு தண்டனை விதித்து கடந்த 2001–ம் ஆண்டு கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியது.
கருணை மனு நிராகரிப்பு இதைத் தொடர்ந்து அவர்கள் ஜனாதிபதிக்கு கருணை மனு தாக்கல் செய்தனர். கடந்த மாதம் அந்த கருணை மனுவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்து உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து புனே மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள அக்காள்– தங்கை இருவரையும் தூக்கில் போட மராட்டிய அரசு ஏற்பாடுகளை செய்து வந்தது.
இதனால் சுதந்திர இந்தியாவில் முதன் முறையாக தூக்கில் போடப்படும் பெண்கள் இவர்களாக இருப்பார்கள் என்று கருதப்பட்டது.
தற்காலிக தடை இந்த நிலையில் ரேணுகா, சீமா ஆகியோர் மும்பை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில், ‘‘தங்களது கருணை மனு மீது முடிவு செய்ய ஜனாதிபதி 5 ஆண்டுகளுக்கு மேல் எடுத்து கொண்டார். ஜனாதிபதி முடிவு எடுப்பதில் செய்த கால தாமதத்தை கருத்தில் கொண்டு, தங்களது தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தனர்.
இந்த மனு நேற்று நீதிபதிகள் வி.எம். கனடே, பி.டி. கோடே ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ரேணுகா, சீமா ஆகியோரின் மனுவை விசாரித்து முடிவு எடுக்கும் வரை அவர்கள் இருவரையும் தூக்கில் போடுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படி மராட்டிய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் மத்திய, மராட்டிய அரசுகள் 3 வாரத்துக்குள் பதிலளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து அடுத்த கட்ட விசாரணையை செப்டம்பர் 9–ந் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர். dailythanthi.com

கருத்துகள் இல்லை: