ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ! பார்த்திபனின் பாமர ஆணாதிக்க கற்பனை ! வழக்கம் போல VULGAR !

 நியாயம் கேட்கும் மனைவியை வீட்டை விட்டு வெளியே போகச் சொல்லும் கணவன் லட்சியவாதியாகச் சித்த ரிக்கப்படுகிறான். தன் மனைவி யின் பிரைவஸிக்கான அடிப் படைத் தேவைகள் பற்றிய பிரக்ஞைகூட இல்லாதவன் நுட்பமான சினிமா எடுக்க விரும்புபவனாகக் காட்டப் படுகிறான்.
கதையே இல்லாமல் ஒரு படம்’, சினிமாவின் நூற் றாண்டிற்கு சமர்ப்பணம் என்ற அறிவிப்புகளுடன் பார்த்தி பன் இயக்கத்தில் வெளிவந்திருக் கும் படம் ‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்.’ சினிமா கனவைத் துரத் தும் இளைஞர்கள் தங்கள் முதல் படத்தை எடுப்பதற்காகக் கதை யைத் தேடி அலைந்துகொண் டிருக்கிறார்கள். அவர்கள் எப்படித் திரைக்கதையை உருவாக்கு கிறார்கள்? சொந்த வாழ்க்கை யில் அவர்கள் சந்திக்கும் சவால் களைத் தாண்டி அவர்கள் சினிமா கனவு நிறைவேறியதா, இல்லையா என்பதுதான் படத்தின் கதைக்களம்.r

பார்த்திபன் எடுத்துக்கொண்ட நீண்ட இடைவெளி அவரது படைப்புத் திறனுக்கான இன் னொரு பரிணாமத்தைக் கொண்டு வந்திருக்கிறது. புத்தம் புதிய வர்களின் விளையாட்டுக் களமாக மாறியுள்ள கோலிவுட், பார்த்தி பனை நிறையவே ‘அப்டேட்’ செய்துகொள்ள நிர்பந்தித் துள்ளது. தனக்கான அடையாளங் களை விட்டுக்கொடுக்காமல் புதிய பாணியில் படம் கொடுக்க விரும்பி அதை வெற்றிகரமாகச் செய்தும் இருக்கிறார்.
குத்தல், கேலி வசனங்களைப் படம் முழுக்கப் பேசும் பார்த் திபன், இதில் அதே குத்தலை யும் கேலியையும் தம்பி ராமை யாவையும், விஜய் ராமையும் பேச வைத்திருக்கிறார். குத்தல் கள் பாத்திரங்களுக்குரிய குண மாற்றங்களுடன் அமைந்து ரசிக்கவைக்கின்றன.
படத்தின் நாயகன் தமிழ் (சந்தோஷ் பிரதாப்), அவரது மனைவியாக தக் ஷா (அகிலா கிஷோர்), நாற்பது ஆண்டு சினிமா அனுபவசாலியாக சீனு (தம்பி ராமையா), உதவி இயக்கு நர்களாக ஷெர்லி (சாஹித்யா), முரளி (விஜய் ராம்), அரவிந்த் (தினேஷ் நடராஜன்), தயாரிப் பாளர் மூர்த்தி (லால் அலெக்ஸ்) என அனைவருமே கச்சித மாக நடித்திருக்கிறார்கள். கலை ஞானம், சேரன், யுடிவி தனஞ் சேயன் போன்றோர் நிஜக் கதா பாத்திரங்ககளாக வருகிறார்கள். பிரகாஷ் ராஜ், ஆர்யா, அமலா பால், விஷால், விஜய் சேதுபதி, தப்ஸி, ராகவா லாரன்ஸ், சாந்தனு, விமல், இனியா, பரத் என திரைக் கலைஞர்கள் பலரையும் பயன்படுத்தியிருக்கிறார் பார்த்திபன். ஆர்யாவுக்கும் அமலா வுக்கும் சற்றே நீண்ட பங்கு உள்ளது. கணவன் தன்னிடம் பொய்சொல்வதை அறியும் காட்சியில் அமலாவின் நடிப்பு மனதில் நிற்கிறது.
சுவாரஸ்யமான திரைக் கதைக்கு மிகப் பெரிய பலம் ஆர். சுதர்சனின் எடிட்டிங். காட்சிகள் விளம்பர படங்களுக்கான உத்தி யில் நாழிகைகளில் மாறி, ஆனால் சுவை குன்றாமல் கதை சொல்கின்றன. இந்தப் படத்தின் தேவை பெரும்பாலும் இன்டீரியர் காட்சிகளாக அமைந்தி ருக்கின்றன.
எனினும், ஒளிப்பதி வாளர் ராஜரத்தினம் குறை கூற முடியாதபடி தன் வேலை யைச் செய்திருக்கிறார். திரைக் கதையும், படத் தொகுப்பும் படத்தை நகர்த்தும் திசையில் சத்யாவின் பின்னணி இசை பயணிக்கிறது. ஒவ்வொரு பாட லுக்கும் ஒவ்வொருவர் இசைய மைத்துள்ளார். ‘லிவ் தி மொமென்ட்’ பாடல் இளைஞர் களின் வரவேற்பைப் பெறும்.
படத்தில் கவர்ச்சி தவிர்க்கப் பட்டிருந்தாலும் ஆணாதிக்கப் பார்வையிலிருந்தே பெண் கதாபாத்திரங்கள் அணுகப் பட்டுள்ளன. தடுக்கி விழும்போது தாங்கிப் பிடிக்கும் ஆடவன்மீது காதல் கொள்ளும் பெண் இப்படத் திலும் உண்டு. காதலிப்பவனுக் காகப் பல சமரசங்களைச் செய்து கொண்டு, வேலைக்குப் போய் சம்பாதிக்கவும் செய்யும் பெண், பார்வையாளர்கள் மனதில் எதிர்மறையாகப் பதியும் வகை யில் திரைக்கதை அமைக்கப் பட்டுள்ளது.நியாயம் கேட் கும் மனைவியை வீட்டை விட்டு வெளியே போகச் சொல்லும் கணவன் லட்சியவாதியாகச் சித்த ரிக்கப்படுகிறான். தன் மனைவி யின் பிரைவஸிக்கான அடிப் படைத் தேவைகள் பற்றிய பிரக்ஞைகூட இல்லாதவன் நுட்பமான சினிமா எடுக்க விரும்புபவனாகக் காட்டப் படுகிறான்.
சினிமா பற்றிய சினிமா என்னும் அடிப்படையைத் தன் வசதிக்கேற்பக் கையாளும் பார்த்திபன் தன் படத்திலும் வலுவான கதை இல்லை என்ப தைத் திறமையாக மறைத்து விடுகிறார். கடைசிக் கட்டத்தில் நாயகனின் சொந்தக் கதையும் அவன் எழுதும் கதையும் பரஸ்பரம் ஊடாடும் விதத்தில் படைப்புத் திறன் பளிச்சிடுகிறது. சினிமா பற்றிய விமர்சனங்கள் விவாதத்துக்குரியவையாக இருந்தாலும் கூர்மையானவை. தம்பி ராமையா அதீத விரக்தியில் “குறும்படம் எடுக்கும் குரங்குகளா” என்று பேசுவதை அட்சேபிக்க ஆட்கள் இருந்தாலும், அதிரடி சிரிப்பொலி தியேட்டரைக் குலுங்கவைக்கிறது என்பதையும் சொல்ல வேண்டும்.
ட்விட்டர் பாணியிலான வசனங்கள், தத்துவங்களை நகைச் சுவையோடு தருவது, கவனத் தோடு எழுதப்பட்ட திரைக்கதை, திரைக்கதை மீது நம்பிக்கை வைத்து வணிக சமரசங்களைத் தவிர்த்திருப்பது போன்றவை படத்துக்கு வலு சேர்க்கின்றன. ஒரு இயக்குநராக, கதை வசன கர்த்தாவாக தனக்கான திறமை கள், ஒரு கதாநாயகனாகத் தனக்குள்ள திறமையைவிட வலிமையானவை என்பதைப் பார்த்திபன் புரிந்து கொண்டிருப்பது நல்ல விஷயம்.tamil.thehindu.com

கருத்துகள் இல்லை: