.jpg)

இதைத்தொடர்ந்து
ரோந்து போலீசார் குணசேகரன், தெய்வீகன் ஆகிய இருவரும் துணிச்சலுடன்
மாணவர்களை விரட்டிச் சென்றனர். போலீசார் விரட்டுவதை பார்த்ததும் நந்தனம்
கல்லூரி மாணவர்கள் ஆளுக்கொரு திசையாக பிரிந்து தப்பிக்க முயன்றனர். ஆனால்
போலீசார் விரட்டி சென்று மாணவர் ஒருவரை மடக்கி பிடித்தனர். அவரது பெயர்
பார்த்தசாரதி (19). எம்.கே.பி. நகரை சேர்ந்த இவர் நந்தனம் கலைக்கல்லூரியில்
பி.ஏ. 2–ம் ஆண்டு படித்து வருகிறார்.
அவரிடம்
இருந்து 2 அடி நீள கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. சரியான நேரத்தில்
போலீசார் மாணவர்களை மடக்கி பிடிக்காமல் விட்டிருந்தால் அண்ணாசாலையில் இன்று
மதியம் கொலை சம்பவம் ஒன்று அரங்கேறி இருக்கும். இதனை தடுத்து நிறுத்தி
மாணவர் ஒருவரையும் மடக்கி பிடித்த போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.
மாணவர்
பார்த்த சாரதியின் நணபர்களான மற்ற 6 பேரும் தப்பி ஓடிவிட்டனர். தப்பி ஓடிய
மாணவர்களில் மணி, சுதர்சன், திவாகர், குரு, பிரவீன் ஆகிய 5 பேர் அடையாளம்
தெரிந்துள்ளது. அவர்களை பிடிக்க வலைவிரிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின்
இதுபோன்ற தொடர் மோதல்களை தடுக்க போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்று பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர் nakkheeran.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக