வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

பணத்திற்காக தம்பதியை கொலைசெய்த கல்லுரிமானவன் ! காட்பாடி கொலைவழக்கி பரபரப்பு !

காட்பாடி தம்பதி கொலை வழக்கில் கைதானவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். வீட்டுக்குள் அழைத்து உபசரித்த கணவன்–மனைவியை நகையை பறிப்பதற்காக வெட்டிக்கொலை செய்துள்ளதாக கூறப்பட்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காட்பாடி கழிஞ்சூர் கலைஞர் நகரில் வசித்த ஜான்பிரிட்டோ அவரது மனைவி ரோஸ்மேரி ஆகியோர் கடந்த மாதம் 15 ஆம் தேதி அவர்களது வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இந்த கொலை தொடர்பாக காட்பாடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பாலிடெக்னிக் மாணவர் பிரவீன் (வயது 20) மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி கிராமத்தை சேர்ந்த சதீஷ்குமார் (24) ஆகியோரை கைது செய்தனர். கைதான சதீஷ்குமாரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது பரபரப்பான தகவல்கள் வெளியாகின.

சதீஷ்குமார் ஜான்பிரிட்டோ வீட்டுக்கு பின்பக்க தெருவில் வசிக்கும் உறவினர் வீட்டில் தங்கியிருந்து வேலூரில் உள்ள ஒரு கல்லூரியில் படித்துள்ளார். அப்போது கிரிக்கெட் விளையாடும்போது பிரவீனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு பிரவீனுடன் அவர் ஊர் சுற்றியுள்ளார்.
இந்த நிலையில் கல்லூரி கட்டணம் செலுத்த பிரவீன் அவரது பெற்றோரிடம் ரூ.22 ஆயிரம் வாங்கினார். அதில் ரூ.8 ஆயிரத்தை இருவரும் செலவழித்து விட்டனர். இதனால் கல்லூரிக்கு பணம் செலுத்த பிரவீனுக்கு சிக்கல் ஏற்படவே அவர்கள் ஜான்பிரிட்டோ வீட்டில் திருட முயற்சி செய்துள்ளனர்.
ஒரு வாரமாக அவர்கள் ஜான்பிரிட்டோவின் நடமாட்டத்தை கண்காணித்துள்ளனர். கடந்த மாதம் 13 ஆம் தேதி ஜான்பிரிட்டோ வீட்டிற்கு சென்று வெளியில் நின்றவாறு காலிங் பெல்லை அடித்துள்ளனர். சத்தம் கேட்டு ஜான்பிரிட்டோ கதவை திறந்துள்ளார். அவருக்கு ஏற்கனவே இவர்களை தெரியும் என்பதால் 2 பேரையும் வீட்டுக்குள் அழைத்துச்சென்றார்.
அப்போது ரோஸ்மேரி இவர்களை பார்த்ததும் குடிப்பதற்கு தண்ணீர் கொடுப்பதற்காக சமையலறைக்கு சென்றார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஜான்பிரிட்டோவின் முகத்தில் அவர்கள் இருவரும் அரிவாளால் வெட்டியுள்ளனர். சத்தம்போடாமல் இருக்க வாயை பொத்தியுள்ளனர். பின்னர் அவர்கள் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு சமையல் அறைக்கு சென்று அங்கு ரோஸ்மெரியை தலையில் கத்தியால் தாக்கியுள்ளனர்.
அதில் அவர் மயங்கியதும் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலி மற்றும் கம்மல், மோதிரம் என 4 பவுன் நகைகளை பறித்த அவர்கள் ரத்தக்கறை படிந்த தங்களது துணிகளை வீட்டு பின்பக்கத்தில் இருந்தபடியே மாற்றிக்கொண்டு சுவர் ஏறி குதித்து தப்பி ஓடினர். பின்னர் கன்னியாகுமரிக்கு சென்று அந்த நகையை விற்று விட்டு கடந்த வாரம் வேலூர் பகுதிக்கு திரும்பியுள்ளனர்.
இந்த நிலையில்தான் காவல்துறையினர் இருவரையும் கைது செய்துள்ளனர். இவ்வாறு வாக்குமூலத்தில் சதீஷ்குமார் கூறியுள்ளார்.  tamil.webdunia.com

கருத்துகள் இல்லை: