செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு: அமலாக்கப்பிரிவு உயர் அதிகாரி ஓராண்டு விடுமுறை !

2ஜி ஸ்பெக்ட்ரம்  வழக்கில் அமலாக்கப்பிரிவு விசாரணை அதிகாரியாக அமலாக்கப்பிரிவு துணை இயக்குனர் ராஜேஷ்வர் சிங், சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்டார். அவர் அப்பணியை கவனித்து வரும் நிலையில், அவரை உத்தரபிரதேச போலீஸ் பணிக்கு மாற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டிடம் மத்திய அரசு கேட்டிருந்தது. அதை எதிர்த்து மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் ராஜேஷ்வர் சிங் வழக்கு தொடர்ந்தார். அவ்வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், ராஜேஷ்வர் சிங், சட்டம் படிப்பதற்காக, ஓராண்டு கல்வி விடுமுறையில் சென்றுள்ளார். இட்டுகட்டி இயற்றிய கதை இப்போ பூமராங் மாதிரி திரும்பி பிரமோத் மகாஜன் காலத்துல இருந்து ஆரம்பிக்க போறதுன்ன உடனே பம்முராய்ங்க ! இது உண்மையில் தலித்துக்களின் மீதும் திராவிட இயக்கத்தின் மீதும் வஞ்சம் தீர்க்க புனையப்பட்ட கதை என்பதில் எள்ளளவு சந்தேகமும் இல்லை . வெட்கமே இல்லாமல் 176000 கோடி கொடின்னவங்க ஒரு சதம்தானும் கண்டு பிடிக்கல . ஆனா கன்னட ரங்கநாயகிக்கு என்ன ஒரு சேவகம் டான்சி தீர்ப்புல அவுக மனசாட்சியே கேட்கட்டும்னு ஒரு தீர்ப்பு ! சொம்புகளுக்கு ஒரு சட்டம் சுயமரியாதைகாரனுக்கு ஒரு சட்டம் ?

இவ்வழக்கில், சட்டவிரோத பணபரிமாற்றம் மற்றும் அன்னிய செலாவணி விதிமீறல் தொடர்பான விசாரணை இன்னும் முடிவடையவில்லை. இந்நிலையில், அவர் விடுமுறையில் செல்வதால் விசாரணை பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. dailythanthi.com

கருத்துகள் இல்லை: