ஞாயிறு, 17 ஜூலை, 2011

(uthayan) தமிழ் ஊடகங்களின் செயற்பாடுகள் காரணமாக வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சில தமிழ் ஊடகங்களின் செயற்பாடுகள் காரணமாக வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மாகாணத்தில் இடம் பெறும் அபிவிருத்திச் செயற்பாடுகளைக் குழப்பும் வகையில் சில தமிழ் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுவருகின்றன. இவ்வாறு தெரிவித்தார் அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா. மண்டைதீவில் நேற்று நடைபெற்ற தண்ணீர் தாங்கிகளைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.


அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையால் புனரமைக்கப்பட்ட நீர் குழாய்களை மீளக் கொண்டு சென்று விட்டனர் எனத் தவறான செய்திகள் தமிழ் ஊடகங்களில் வெளிவருகின்றன.அபிவிருத்தி இடம்பெறுகின்றது. மக்களின் தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன. எனவே ஊடகங்கள் குறிப்பாக தமிழ் ஊடகங்கள் மெய்யான தகவல்களைப் பரப்பி வளர்ச்சிக்கு உதவ வேண்டும். தவறான செய்திகளை வெளியிட்டு அபிவிருத்தியைத் தடைசெய்ய வேண்டாம்.

மண்டைத்தீவு மக்கள் நீண்ட காலமாக மின்சாரம், குடிதண்ணீர், வீதி அபிவிருத்தி, ஆஸ்பத்திரி மற்றும் உயர் பாதுகாப்பு விடயம் தொடர்பில் அல்லலுறுவதை நான் அவதானித்துள்ளேன். இதற்கு விரைவில் தீர்வு எட்டப்படும்.என்றார்.இந்த நிகழ்வில் அமைச்சர் ஹிஸ்புல்லா, தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்பு சபையின் தலைவர், உபதலைவர், பிராந்திய ஆணையாளர், எந்திரி பா.தபேந் திரகுமார், யாழ்.கிளிநொச்சி குடிதண்ணீர் விநியோகத்திட்டப் பணிப்பாளர் எந்திரி தி.பாரதிதாசன், பிரதிப் பொதுமுகாமையாளர் டிலிப் குணவர்த்தன, உபதலைவர் காமினி நவரட்ணா, ஆளுநர்களான ஜீ.ஏ.சந்திரசிறி, மொஹான் விஜயவிக்கிரம, வேலணைப் பிரதேச செயலர் மு.நந்தகோபாலன் யுனிசெப் நிறுவன அதிகாரி பி.தயாபரன், கிராம அதிகாரிகள், பொது அமைப்புகள், நீர்வழங்கல் சபை அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை: