tamil.oneindia.com - Vigneshkumar : சென்னை: பிஎஸ்பி கட்சியின் தமிழ்நாடு தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பிரமுகர் அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே இந்த அஸ்வத்தாமன் ஆம்ஸ்ட்ராங் மகளின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட போட்டோ இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
பகுஜன் சமாஜ் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ம் தேதி சென்னையில் அவரது இல்லத்தின் அருகிலேயே வைத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
தேசிய கட்சியின் மாநில தலைவர் ஒருவரே படுகொலை செய்யப்பட்டது நாடு முழுக்க அப்போது பேசுபொருள் ஆனது. ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளை விரைந்து பிடிக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தினர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை: இந்த வழக்கில் விசாரணையைத் தொடங்கியதில் இருந்து பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்களும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் இதுவரை 21 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இதில் கைது செய்யப்பட்ட திருவெங்கடம் என்பவர் போலீசாரிடம் இருந்து தப்பியோட முயன்ற போது என்கவுண்டர் செய்யப்பட்டார். ஆம்ஸ்டிராங் கொலையில் மூளையாகச் செயல்பட்டதாகக் கருதப்படும் பொன்னை பாலு, அருள் உள்ளிட்ட 5 பேரை மூன்றாவது முறையாகக் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
armstrong police crime
விசாரணையில் அவர்கள் கொடுத்த தகவல் அடிப்படையில் தமிழக இளைஞர் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகியான வழக்கறிஞர் அஸ்வத்தாமன் என்பவரை போலீசார் நேற்றைய தினம் கைது செய்தனர். இந்த அஸ்வத்தாமன் தற்போது சிறையில் உள்ள ரவுடி நாகேந்திரன் என்பவரின் மகன் ஆவர். கடந்த 2 நாட்களாக அஸ்வத்தாமனிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்திய நிலையில், அதில் பல திடுக் தகவல்கள் தெரிய வந்தது.
அஸ்வத்தாமன்: அதாவது அஸ்வத்தாமனுக்கும் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் ஏற்கனவே மோதல் இருந்ததும் இதனால் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்யத் திட்டமிட்டிருந்ததும் தெரிய வந்தது. மேலும், இதற்காகவே அவர் அருள் (ஏற்கனவே இந்த வழக்கில் கைதாகியுள்ளார்) என்பவரைப் பல முறை சந்தித்துப் பேசியிருக்கிறார். மேலும், பண உதவிகளையும் செய்து வந்துள்ளார். இதற்காக ரவுடி சம்போ செந்திலுடனும் பேசி இருப்பது தெரிய வந்தது.
போலீஸ் திட்டம்: அஸ்வத்தாமன் கைது குறித்த தகவல் கிடைத்தவுடன் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கிடையே விசாரணைக்கு பிறகு அஸ்வத்தாமன் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் புது ட்விஸ்ட்! சிறையில் இருந்தே ஸ்கெட்ச்? பிரபல ரவுடியை டார்கெட் செய்த போலீஸ் ஆம்ஸ்ட்ராங் வழக்கில் புது ட்விஸ்ட்! சிறையில் இருந்தே ஸ்கெட்ச்? பிரபல ரவுடியை டார்கெட் செய்த போலீஸ்
இதையடுத்து அஸ்வத்தாமன் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலையில் இந்த அஸ்வத்தாமன் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படுகிறார். எனவே, அவரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
போட்டோ: இதற்கிடையே அஸ்வத்தாமன்- ஆம்ஸ்ட்ராங்கின் பழைய போட்டோ ஒன்று இணையத்தில் இப்போது வேகமாகப் பரவி வருகிறது. அதாவது ஆம்ஸ்ட்ராங் மகளின் பிறந்தநாள் விழா சமீபத்தில் நடந்த நிலையில், அதில் அஸ்வத்தாமன் கலந்து கொண்டு இருக்கிறார். மேலும், ஆம்ஸ்ட்ராங்கிற்கு புத்தகம் ஒன்றையும் பரிசாக வழங்கி இருக்கிறார். இந்த போட்டோ தான் இப்போது இணையத்தில் பரவி வருகிறது.
துரோகிகள்: துரோகிகள் உடன் இருந்தே ஆம்ஸ்ட்ராங் உயிரைப் பறித்துள்ளனர் என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள். இது மட்டுமின்றி நினைவேந்தல் நிகழ்விலும் கைதான அஸ்வத்தாமன் கலந்து கொண்டு இருக்கிறார். இது தொடர்பான போஸ்டரையும் நெட்டிசன்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக