ஞாயிறு, 19 ஜூன், 2022

நடிகை சாய் பல்லவி : கும்பல் படுகொலைய நியாயப்படுத்துறாங்க! மத வன்முறை தவறு.. எனக்கு எல்லா உயிரும் சமம்

Noorul Ahamed Jahaber    -    Oneindia Tamil  :;  சென்னை: கும்பல் படுகொலைகளை சிலர் நியாயப்படுத்துவது அதிர்ச்சியளிப்பதாகவும், மதத்தின் பெயரால் நிகழ்த்தப்படும் எந்த வன்முறையும் தவறு என்று நடிகை சாய் பல்லவி தெரிவித்து உள்ளார்.
தெலுங்கில் ரானா டகுபதி, சாய் பல்லவி இணைந்து நடித்து இருக்கும் விரட்டா பர்வம் திரைப்படம் நேற்று வெளியானது.
இந்த நேர்காணலில் பேசிய சாய் பல்லவி, "காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தில் பண்டிட்டுகள் கொல்லப்பட்டதாக காட்டி இருக்கிறார்கள்.
ஆனால், சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்தது. பசுவை கொண்டு சென்ற ஒரு நபரை இஸ்லாமியர் என்று கருதி கும்பலாக தாக்குகிறார்கள்.
அந்த நபர் கொல்லப்பட்டவுடன் ஜெய் ஸ்ரீராம்' என்று முழக்கமிடுகிறார்கள். காஷ்மீரில் அன்று நடந்ததற்கும் தற்போது நடந்து கொண்டிருப்பதற்கும் என்ன வித்தியாசம்.?" என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்
 பசுவுக்காக இஸ்லாமியரை கொன்றுவிட்டு பசுவுக்காக இஸ்லாமியரை கொன்றுவிட்டு "ஜெய் ஸ்ரீராம்" என்று கோஷமிடுகிறார்கள் -

சாய் பல்லவி விளக்கம் சாய் பல்லவி விளக்கம் இதற்கு ஒரு பக்கம் ரசிகர்கள், பொதுமக்கள் ஆதரவு தெரிவிக்க மறுபக்கம், பாஜக மற்றும் வலதுசாரி ஆதரவாளர்கள் சாய் பல்லவியை கடுமையாக விமர்சித்து பதிவிட்டனர். இதுகுறித்து சாய் பல்லவி இன்ஸ்டாகிராமில் விளக்கம் கொடுத்து வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
அதில், "சமீபத்தில் நான் கலந்துகொண்ட நேர்காணல் ஒன்றில் இடதுசாரியா? வலதுசாரியா? என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு நான், எனக்கு நடுநிலையில் நம்பிக்கை உள்ளது. நல்ல மனிதர்களாக இருக்க வேண்டும் என்று கூறினேன்.

காஷ்மீர் பைல்ஸ் மற்றும் கும்பல் படுகொலை ஆகிய 2 விசயங்களை நான் குறிப்பிட்டேன். காஷ்மீர் பைல்ஸ் இயக்குநருடன் எனக்கு பேச வாய்ப்பு கிடைத்தது. 3 மாதங்களுக்கு முன் காஷ்மீர் பைல்ஸ் படத்தை பார்த்து மனதளவில் பாதிக்கப்பட்டதை அவரிடம் கூறினேன். அதேபோல் கொரோனா ஊரடங்கின்போது கும்பல் படுகொலை வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். மதத்தின் பெயரால் நிகழ்த்தப்படும் எந்த வன்முறையும் தவறுதான்.

எல்லா உயிரும் முக்கியம் சிலர் கும்பல் படுகொலைகளை நியாயப்படுத்துவது அதிர்ச்சியளிக்கிறது. யாருடைய உயிரையும் எடுக்க யாருக்கும் உரிமை கிடையாது. ஒரு மருத்துவராக அனைத்து உயிரும் சமம், முக்கியம் என்று நம்புகிறேன். அடையாளத்தின் பெயரால் யாரும் யாரையும் பார்த்து பயப்படக்கூடாது. பள்ளி படிக்கும்போது அனைத்து இந்தியர்களும் எனது சகோதர சகோதரிகள் என்று உறுதிமொழி எடுத்துள்ளோம். அது எனது மனதில் நன்கு பதிந்துள்ளது. சிறுவயதில் நாங்கள் சாதி, மதம், கலாச்சாரத்தால் வேறுபாடு பார்த்ததில்லை. ஆதரித்த அனைவருக்கும் நன்றி ஆதரித்த அனைவருக்கும் நன்றி நாங்கள் எப்போதும் நடுநிலையாகவே இருந்திருக்கிறோம்.
நான் சொன்னதை தவறாக புரிந்துகொண்டார்கள். முக்கிய நபர்கள், இணையதளங்கள் எனது முழு பேட்டியை கேட்காமல் ஒரு சிறு பகுதியை பார்த்துவிட்டு பதிவிட்டு உள்ளனர். நான் சொன்னதன் உண்மை தன்மையை அவர்கள் ஆராயவில்லை. நான் என்ன தவறு செய்தேன் என்று சிந்தித்துக்கொண்டே இருந்தேன். தனிமையாக உணர்ந்தேன். எனக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி

கருத்துகள் இல்லை: