வெள்ளி, 10 ஜூலை, 2020

தமிழை கற்று கொள்ளவேண்டிய அவசியம் .. பிறருக்கு ஏற்பட்டு விட்டது ..

Sergio Marquina : நாம் ஏன் ஹிந்தி படிக்கவில்லை ?
ஆரம்பத்தில் எல்லோரையும் போல் திராவிட அரசியல் களமாடியவர்கள் எனக்கு அநீதி இழைத்துவிட்டார்கள் என்றுதான் நானும் நினைததேன். கேரளாவுக்கு போனால் எல்லோரும் அழகாக தமிழ் பேசுகிறார்கள்.
பெங்களூரு சென்றால் எல்லோரும் சுந்தரத் தமிழில் பேசுகிறார்கள்.
திருப்பதி போனால் தமிழ் தெரியாத தெலுங்கரே இல்லை.
குஜராத் போனால் பாணி பூரி விற்பவனுக்குக் கூட தமிழ் தெரிகிறது.
உலக அழவில் திருக்குறளை வட இந்தியர்கள் உவமை காட்டுகிறார்கள்.
அப்போது எனக்கு ஒன்று புரிந்தது. 50 வருட திராவிட ஆட்சி நமக்கு தற்சார்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
எவன் ஒருவன் ஒரு மொழியை தெரிந்து கொள்ள அவசியம் ஏற்படுகிறதோ அந்த மொழி பேசும் மக்களை சாந்து வாழவேண்டிய தேவையும் அவசியமும் இருப்பதாலேயே கற்றுக்கொள்கிறான். பயனடைகிறான்.
கேரளத்தவருக்கு தொழில்நிறுவனங்கள் இல்லாத குறை. உயர்கல்வி கட்டமைப்பு இல்லாத குறை. ஏன் ஒரு படம் எடுக்க வேண்டும் என்றால் சென்னைக்கு வர வேண்டும். திருவனந்தபுரத்தில் ஸ்டுடியோக்களில்லை சில காலம் முன்பு வரை.
அதனால் கேரளத்தவர் தமிழ் கற்றனர். கல்வி கற்க தமிழகம் வந்தனர்.
பெங்களூரை சேர்ந்த கன்னடர்களுக்கும் அப்படித்தான் தொழில்நுட்பங்கள் வேண்டி தமிழகம் வந்தனர். குறிப்பாக அவர்களுக்கு தென்னிந்தியாவின் மான்செஸ்டர் கோவையை அண்டியிருக்க வேண்டிய அவசியமும் தேவையும் இருந்தது.

ஆந்திராவும் அப்படியே முழுக்க முழுக்க விவசாயம். அவர்களுக்கு மாற்று வருமானம் வேண்டுமென்றால் தமிழ்நாடே கதி.
மக்களை மக்கள் வருமானத்தை அண்டிப் பிழைக்கும் திருப்பதி தெலுங்கர்களுக்கு வேறுவழியில்லை. தமிழகத்தின் செல்வங்களை கொள்ளையடிக்க தமிழர்களுக்கு ஏழுமலையானை விதைத்து மூளைச்சலவை செய்ய தமிழ் கற்க வேண்டியது இருந்தது.
மம்முட்டி, மோகன்லால், சிரஞ்சீவி, சோபன் பாபு,NTR, கிருஷ்ணா போன்ற சென்ற தலைமுறை நடிகர்களும் துல்கர் சல்மான், பிரித்திவிராஜ், மகேஷ் பாபு போன்ற இன்றைய நடிகர்களும் நடிப்புக்கு படிப்புக்கு தமிழகத்தை சார்ந்து வாழ்ந்தவர்கள் அதனால் தான் தமிழை நன்றாக கற்றுக் கொண்டனர்.
அந்த விதத்தில் தமிழன் மற்ற மொழிகளை கற்றுக் கொள்ளாததற்கு நாம் யாரையும் அண்டிப் பிழைக்கும் அவசியம் இல்லாத தற்சார்பு பொருளாதாரம் உட்கட்டமைப்புகளை ஏற்படுத்தியது அரை நூற்றாண்டு திராவிட கட்சிகளின் ஆட்சி முறையாலே.
தமிழன் மற்ற மொழிகளை கற்க வேண்டிய அவசியம் எழவில்லை என்பது பெருமை தானே தவிர வருத்தப்பட ஒன்றுமில்லை.
நமக்கு தேவைப்படாத கடவுளை தலையில் திணித்து ஆதாயம் பார்ப்பது போன்றதுதான் நாம் மற்ற மொழிகளை கற்கவில்லை என்ற தாழ்வு மனப்பான்மையை தமிழ்ச் சமூகத்தின் மீது திணிப்பதே கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.
Sergio Marquina

கருத்துகள் இல்லை: