புதன், 8 ஜூலை, 2020

உலக சுகாதார அமைப்பில் இருந்து திடீரென வெளியேறிய அமெரிக்கா:

வெப்துனியா :  உலக சுகாதார அமைப்புக்கும் அமெரிக்காவுக்கும் கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்த நிலையில் தற்போது திடீரென உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறுவதாக அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும் குறிப்பாக கொரோனா வைரஸ் மனிதர்களிடையே பரவக் கூடியது என்பதை சீனா மறைத்ததை உலக சுகாதார அமைப்பு கண்டுகொள்ளாமல் இருந்தது என்றும் உலக சுகாதார அமைப்பின் மீது அமெரிக்கா புகார் வைத்தது
ஒரு கட்டத்தில் உலக சுகாதார அமைப்புக்காக நிதியை நிறுத்துவோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் உலக சுகாதார அமைப்பு உடனடியாக தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று அமெரிக்கா கெடு விதித்தது


இந்த நிலையில் அமெரிக்காவின் எந்த எச்சரிக்கையும் உலக சுகாதார அமைப்பு கண்டுகொள்ளாததை அடுத்து தற்போது உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறுவதாக அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது<;">ஐநா சபையின் கீழ் இயங்கும் இந்த அமைப்பு கொரோனா குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் வெளியேறுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை கமிட்டியில் உள்ள செனட்டர் உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறியதை அதிகாரபூர்வமாக தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: