செவ்வாய், 7 ஜூலை, 2020

காலியாகும் பெங்களூரு .. மலையாளி, குஜராத்தி. மார்வாடி .பாஞ்சாபி வங்காளி .. Run ?


Kathir RS : பெங்களூர் வாழ் தொழில் நண்பர் இன்று தொடர்பில் வந்தார்..
பெங்களூர் சிட்டியில் 60% சதவீத கடைகள் உணவகங்கள் தொழில் நிறுவனங்கள் காலி செய்து கொண்டு போய் விட்டதாகத் தெரிவித்தார்.வருத்தமாக இருந்தது.
இந்தியாவிலேயே பெங்களூரில்தான் அதிக அளவிளான மைக்ரேட்டட் முதலாளிகளின் தொழில் நிறுவனங்கள் உணவகங்கள் கடைகள் இயங்கிவந்தன.
மலையாளிகள் குஜராத்திகள் மார்வாடிகள் தில்லி வாலாக்கள், பஞ்சாபிகள், வங்காளிகள் வட கிழக்கு மாநிலத்தவர் என எல்லோரும் தொழில் நடத்திய ஒரு மாநகரம் பெங்களூர்..
இவர்கள் இங்கு அதிக அளவில் வந்ததது வளர்ந்தது கடந்த 10-15 ஆண்டுகளாகத்தான்..
இந்த திடீர் தொழில் பாப்புலேசன்..பெற்ற திடீர் வளர்ச்சி அந்த நகரத்தையே மற்ற இந்திய நகரங்களிடமிருந்து பிரித்து தனித்து காட்டியது.
கிட்டத்தட்ட ஒரு கிழக்கு ஐரோப்பிய நகரத்தைப் போல திகழ்ந்தது அந்நகரம்.
Mejestic,MG Road,Mayo Hall,Brigade Road போன்ற பெங்களூரின் பழைய அடையாளங்கள் அதர பழைய அடையாளங்களாயின..
கோரமங்கலா, எலக்ட்ரானிக்சிட்டி,ஜெயா நகர்,ஜேபி நகர்,மரத்தஹல்லி என பல புதிய லேன்ட் மார்க்குகள் உருவாகின.
எங்கு காணினும் சின்ன பெரிய ஸ்டைலான
உணவகங்கள்..விடுதிகள்..பப்கள்..கண்கவர் மால்கள்..அப்பேரல் கடைகள் என பெங்களூரின் புதிய முகம் ..மிகவும் ட்ரென்டியானது வசீகரமானது..
கன்னடர்களோ தமிழர்களோ பெரிய அளவில் அங்கு கடை முதலாளிகளாக இல்லை..எல்லாமும் வட இந்தியர்களிடம் போய் விட்டன..கிட்டத்தட்ட பாதி பெங்களூரை வட இந்தியர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே வாங்கி விட்டார்கள்..
கடந்த பத்தாண்டுகளில் பெங்களூரில் குடி யேறியவர்களின் வாழ்வாதாரம் என்றுமே பொய்க்கவில்லை.நல்ல வருமானத்துடன்..கேட்ட வாடகையை கொடுத்துவிட்டு வளமாகவே வாழ்ந்தார்கள்..
ஆனால் தற்போது கொரோனா லாக் டவுன் கடை முதலாளிகளான பனியாக்களின் கோர முகத்தை வெளிக்கொண்டு வந்து விட்டது.
வாடகையை அட்வான்சில் கழித்து.. அதற்கு மேலும் அந்த செலவு இந்த செலவு என்று சொல்லி பணம் தராமல் அலைக்கழித்து..பலரை அப்படியே ஒட விட்டிருக்கிறார்கள்.வருமானமும் இல்லாமல் கொடுத்த பணமும் கிடைக்காமல் போட்டது போட்ட படி பலர் சொந்த ஊருக்கு போய்விட மீதி பேர் என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறார்கள்.
ஒரு சிறிய கடைக்கே லட்ச ரூபாய் வாடகை 10 லட்சம் அட்வான்ஸ் என்பது அங்கு மிகச் சாதாரணம்..
இந்த விவகாரத்தில் எத்தனை பேரின் பணம் உழைப்பு சுரண்டப்பட்டதோ..எத்தனை பேர் ஏமாற்றப்பட்டார்களோ.
No Doubt கொரோனா Favours the Richest..
இது பற்றி பேசிக் கொண்டிருந்துவிட்டு நண்பர் கடைசியாக ஒன்று சொன்னார்..
திஸ் பிளடி சைனீஸ்..ஒர்ஸ்ட் ஃபெல்லோஸ்..இது எல்லாத்தையும் அவனுங்கதான் ப்ளான் பண்ணி பன்றானுங்க என்றார்..
எனக்கு மேலே பேச ஒன்றும் தோன்றவில்லை..
கதிர்.ஆர்.எஸ்

கருத்துகள் இல்லை: