வெள்ளி, 10 ஜூலை, 2020

திருப்பதி ஊழியர்களுக்கு வேக வேகமாக பரவும் கொரோனா

latest tamil newsதினமலர் :  திருப்பதி: திருமலையில், பணிபுரியும் தேவஸ்தான ஊழியர்களுக்கு, கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது.
கொரோனா பரவலை தடுக்க, திருமலையில் மார்ச், 20 முதல், பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பல்வேறு கட்ட பொது முடக்கத்திற்கு பின், அறிவிக்கப்பட்ட தளர்வுகளுடன் ஜூன், 8 முதல், ஏழுமலையான் தரிசனம் அனுமதிக்கப்பட்டது. இதனால் பக்தர்களின் எண்ணிக்கை தினசரி, 12 ஆயிரமாக உயர்ந்தது.
இந்நிலையில், தேவஸ்தான ஊழியர்கள், அர்ச்சகர்கள், பாதுகாப்பு ஊழியர்கள் என, 17 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இவர்கள் தேவஸ்தானம் நடத்தி வரும், 'சிம்ஸ்' மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து, தேவஸ்தானத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் கொரோனா பரிசோதனை நடந்தது.

இதில், கொரோனா தொற்று எண்ணிக்கை, 50க்கும் அதிகமாக உயர்ந்தது. இதையடுத்து, ஊழியர்களின் நலன் கருதி, திருப்பதி தேவஸ்தான செயல் இணை அதிகாரி பசந்த் குமார் தலைமையில், குழு ஏற்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிற

கருத்துகள் இல்லை: