சனி, 10 ஆகஸ்ட், 2019

கே.எஸ்.அழகிரி : மு.க.ஸ்டாலின் திறமை இப்போதா தான் தெரியுது...எப்படி சமளிக்குறாருனு தெரியல .. கலகல பேச்சு..!!

namadhutv.com :  சென்னை :மாநிலங்களவையில் காங்கிரஸ் குறித்து பேசிய வைகோவின் பேச்சுக்கு தமிழக காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் ஒரே கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் மதிமுக இடையே பிளவு ஏற்பட்டுள்ளது.
இருவரும் மாறி மாறி குற்றம் சாட்டி வரும் நிலையில், சென்னை விமான நிலையத்தில் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்,
வைகோ மீது எனக்கு எந்த வன்மமும் கிடையாது. அவருடைய பேச்சின் மீதும் எனக்கு எப்போதுமே பிரியம் உண்டு. வைகோ தமிழரே இல்லை என சீமான் கூறியபோது தடுத்தவன் நான் என்றார்.
வைகோவை எம்பி ஆக்கினால் 8 பேரும் ஆதரவளிக்க மாட்டோம் என நாங்கள் கூறியிருந்தால் வைகோவை ஸ்டாலின் எம்பியாக்கி இருப்பாரா? என்று கேள்வி எழுப்பிய அவர், எங்களின் மறைமுக வாக்கால் தான் வைகோ எம்பி ஆனார் என்றார்.
காஷ்மீர் மசோதா மீதான விவாதத்தில் காஷ்மீர் பற்றி பேசாமல் காங்கிரஸ் குறித்து வைகோ பேசியது ஏன் எனவும் அழகிரி கேள்வி எழுப்பினார்.

மோடி, அமித்ஷாவை மகிழ்ச்சியடைய செய்வதற்காகவே காங்கிரஸை வைகோ விமர்சிக்கிறார் எனவும் அழகிரி தெரிவித்தார்.">நேருவால் தான் இந்தியாவுடன் காஷ்மீர் இணைந்தது. ஆனால் நேருவை புகழாமல், மோடியை புகழ்ந்து பேசுகிறார் வைகோ.
காஷ்மீர் விவகாரத்தில் நேருவும், காங்கிரசும் என்ன தவறு செய்தது என வைகோ கூறினால், நான் பதிலளிக்க தயாராக உள்ளேன் எனவும் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மிகசிறந்த கூட்டணியை உருவாக்கினார்
;என்னுடைய 50 ஆண்டுகால அரசியலில், இப்படி வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுபவர்களை கூட வைத்துக்கொண்டு ஒரு இணக்கமான கூட்டணியை அவர் வழிநடத்தியுள்ளது சாதாரண விஷயம் அல்ல. இன்னைக்கு தான் தெரிந்தது மு.க.ஸ்டாலின் திறமை என்றார்.

கருத்துகள் இல்லை: