
தினமலர்: புதுடில்லி: முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு நேற்று (ஆக.,08)
பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட விழாவில் கலந்து கொள்ளாமல் காங்.,
தலைவர்களான சோனியாவும், ராகுலும் புறக்கணித்துள்ளனர்.

ஜனாதிபதி
மாளிகையில் நேற்று மாலை நடந்த விழாவில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப்
முகர்ஜிக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாட்டின் உயரிய பாரத ரத்னா விருது
வழங்கி கவுரவித்தார். இதில் கலந்து கொள்ளாமல் ஐக்கிய முற்போக்கு
கூட்டணியின் தலைவர் சோனியாவும், காங்., எம்.பி.,யுமான ராகுலும்
புறக்கணித்தது பல காங்., தலைவர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.
2018
ம் ஆண்டு ஆர்எஸ்எஸ்.,ன் அழைப்பை ஏற்று அவர்கள் தலைமையகத்தில் நடந்த ஆண்டு
விழாவில் பிரணாப் முகர்ஜி உரையாற்றினார். இதனால் ஏற்பட்ட மனக்கசப்பு
காரணமாக பிரணாப் முகர்ஜியின் விருது வழங்கும் விழாவை சோனியாவும் ராகுலும்
புறக்கணித்திருக்கலாம் என கூறப்படுகிறது.
பிரணாப்பின் விருது
வழங்கும் விழாவில் அனைத்து முக்கிய பா.ஜ., தலைவர்கள் கலந்து கொண்டனர். அதே
சமயம் ஆனந்த் சர்மா, சசிதரூர், சுஷில்குமார் ஷிண்டே, ஜனார்தன் திரிவேதி
போன்ற சில காங்., தலைவர்கள் மட்டுமே இவ்விழாவில் கலந்து கொண்டனர். காங்.,
கடுமையாக எதிர்க்கும் பா.ஜ., மற்றும் ஆர்எஸ்எஸ் விழாவில் பிரணாப் கலந்து
கொண்டதை காங்., கடுமையாக விமர்சித்திருந்தது.
1980
களின் துவக்கம் முதல் அப்போதை பிரதமர் இந்திரா மற்றும் முக்கிய காங்.,
தலைவர்களுடன் இணைந்து பணியாற்றியவர் பிரணாப். நிதி, வெளியுறவு, பாதுகாப்பு
என பல்வேறு அமைச்சகங்களில் திறம்பட பணியாற்றிய பெருமை கொண்ட பிரணாப்
முகர்ஜி, 2012 ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று, நாட்டின்
ஜனாதிபதி ஆனார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக