

லைனில் வெளியிட்டது. இதனால் படக் குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். தமிழ் ராக்கர்ஸ் இது போல தொடர்ந்து புதுப்படங்களை வெளியிட்டு திரையுலகினரை நோகடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
நேர்கொண்ட பார்வை படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று ரிலீஸ் ஆனது. மறைந்த நடிகை ஸ்ரீதேவி முன்னமே கூறியபடி, அவரது கணவர் போனிகபூர் நிறுவனத்திற்கு இந்தப் படத்தை நடித்துக் கொடுத்தார் அஜீத். இந்தப் படத்தின் பிரிவியூ, சில தினங்களுக்கு முன்பு சிங்கப்பூரில் வெளியிடப்பட்டது. படத்தின் சில பகுதிகள் எப்படியோ கசிந்து தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியானது. அதையும் தாண்டி இன்று (ஆகஸ்ட் 8) தியேட்டர்களில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்திற்கு ரசிகர்கள் அமோக ஆதரவு கொடுத்தனர்.
நேர்கொண்ட பார்வை விமர்சனம்
திரையுலக பிரபலங்கள் பலரும், இந்தப் படத்தின் கதையை பெரிதும் பாராட்டி வருகிறார்கள். பாலியல் புகார், அதைத் தொடர்ந்து அவதூறுகளுக்கு ஆளான பெண்களுக்காக அஜீத் போராடும் கதாபாத்திரத்தில் வருகிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் விஸ்வாசம் படத்தை பிளாக் பஸ்டர் ஹிட்டாக கொடுத்த அஜீத், இந்தப் படத்தையும் மெஹா ஹிட்டாக கொடுத்திருப்பதாக விமர்சனங்கள் வந்திருக்கின்றன.
இந்தச் சூழலில்தான் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் அஜீத்தின் நேர்கொண்ட பார்வை படத்தை முழுமையாக வெளியிட்டது. இது அஜீத் ரசிகர்களை மட்டுமன்றி, சினிமா உலகத்தினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அவ்வப்போது இணையதள முகவரியை மாற்றிக்கொண்டு, தமிழ் ராக்கர்ஸ் செய்யும் அட்டகாசத்தை திரையுலகம் தடுக்க முடியாமல் தவிப்பது சோகம்தான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக