வெள்ளி, 9 ஆகஸ்ட், 2019

வேலூர் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது ... முன்னணி விபரம் 10 மணிக்கு ....

வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை முன்னணி நிலவரம் 10 மணி முதல் வெளியாக வாய்ப்பு தினத்தந்தி : வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை முன்னணி நிலவரம் 10 மணி முதல் வெளியாக வாய்ப்பு வேலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. 
வேலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முன்னணி நிலவரங்கள் காலை 10 மணி முதல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலில் வெற்றி வாகை சூடுவது யார்? என்பது இரவில் தெரியவரும். 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு< வேலூர் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க. சார்பில் கதிர்ஆனந்தும், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமியும் இவர்கள் உள்பட 28 பேர் போட்டியிட்டனர். தேர்தலன்று பதிவான வாக்குகள் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் இன்று (வெள்ளிக்கிழமை) எண்ணப்படுகிறது. இதனையொட்டி அங்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.


இந்த நிலையில் வாக்கு எண்ணும் மையத்தில் பணிபுரிய உள்ள 324 மேற்பார்வையாளர்கள், உதவியாளர்களுக்கு பணியின்போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்த 2-ம் கட்ட இறுதி பயிற்சி வகுப்பு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சண்முகசுந்தரம் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் கலெக்டர் சண்முகசுந்தரம் கூறியதாவது:-

8 மணிக்கு தொடக்கம்

வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர்கள், நுண் பார்வையாளர், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள், தேர்தல் பணியில் உள்ள அரசு ஊழியர்கள், வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணும் முகவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள அனைத்து அலுவலர்களும் கண்டிப்பாக அடையாள அட்டையினை அணிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு மேஜைக்கும் ஒவ்வொரு வேட்பாளரின் சார்பிலும் முகவர் ஒருவர் நியமிக்கப்படுவார். இது தவிர உதவி தேர்தல் அலுவலர் மேஜையில் கூடுதலாக ஒரு முகவர் இருப்பார். ஒவ்வொரு மேஜையிலும் வாக்கு எண்ணிக்கைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள கட்டுப்பாட்டு கருவியின் (சுற்றுவாரியாக) வரிசை எண்கள் அச்சடித்து ஒட்டப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை காலை 7.30 மணியளவில் வேட்பாளர்கள், முகவர்கள் பொது தேர்தல் பார்வையாளர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோர் முன்னிலையில் திறக்கப்படும். அதன்பின் 8 மணியளவில் தபால் வாக்குகளும் அனைத்து சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் ஒரேநேரத்தில் எண்ணப்படும்.

செல்போனுக்கு அனுமதி கிடையாது

கட்டுப்பாட்டுக் கருவியினை எடுத்து அனைத்து வாக்கு எண்ணும் முகவர்களுக்கு தெரியும் வகையில் உயர்த்தி தூக்கி காட்டப்பட வேண்டும். அப்போது கட்டுப்பாட்டுக் கருவியின் திரையில் தோன்றும் பதிவான வாக்குகள் விவரம், ஒவ்வொரு வேட்பாளர் பெற்ற வாக்குகள் விவரம் ஆகியவை தோன்றும். வேட்பாளர்களின் முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்தினுள் தங்களுடைய செல்போனை கொண்டு வர அனுமதி கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

10 மணிக்கு முன்னணி நிலவரம்

வேலூர் தொகுதியில் இன்று நடைபெறும் ஓட்டு எண்ணிக்கை தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைமுறையே வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கும் பின்பற்றப்படும். காலை 7 மணிக்கு தபால் ஓட்டுகள் எண்ணிக்கை நடைபெறும். முன்னணி நிலவரம் காலை 10 மணிக்கு பின்னர் தெரிய வரும். வெற்றி பெறும் வேட்பாளர் பற்றிய இறுதி நிலவரம் இரவு வரை தாமதம் ஆகலாம். ஓட்டு எண்ணிக்கை நடவடிக்கைகள் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். 1,073 போலீசாரும், 100 பேர் அடங்கிய ஒரு கம்பெனி துணை ராணுவ படையினரும் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.<

கருத்துகள் இல்லை: