செவ்வாய், 6 ஆகஸ்ட், 2019

தூதரை திரும்ப அழைக்க பாக்கிஸ்தான் முடிவு?


தினமலர் : இஸ்லாமாபாத்: காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு பறித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்தியாவிற்கான தூதரை திரும்ப பெற்று கொள்ள பாக்., முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஜம்மு - காஷ்மீருக்கு தற்காலிகமாக வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்துகள் அரசியல் அமைப்புச் சட்டத்தின் 370 மற்றும் 35 - ஏ பிரிவுகளை மத்திய அரசு நேற்று ரத்து செய்ததன் மூலம் முடிவுக்கு வந்தன. மாநிலத்தை ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதற்கான மசோதா பெரும்பான்மை ஆதரவுடன் ராஜ்யசபாவில் நேற்று நிறைவேறியது. மோடி அரசின் இந்த முடிவுக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிித்திருந்தது.

இந்த விவகாரத்தில், இந்தியாவிற்கான தூதரை திரும்ப அழைத்து கொள்ள பாகிஸ்தான் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவிற்கான பாக்., புது தூதர் தற்போது பாகிஸ்தானில் தான் உள்ளார். அவர் வரும் 16ம் தேதி பதவியேற்க இருந்தார். இருப்பினும் ஆலோசனைக்கு பிறகு தற்போது, பணியில் உள்ள பொறுப்பு தூதரை திரும்ப பெற்று கொள்ள அந்நாடு முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கருத்துகள் இல்லை: