பாகிஸ்தான் இந்தியாவுடனான அனைத்து உறவுகளையும் முறிக்கிறது ... பாகிஸ்தான் 5 முக்கிய முடிவு
tamil.oneindia.com - shyamsundar.:
இஸ்லாமாபாத்:
காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்ததை அடுத்து இந்தியாவுடன்
பாகிஸ்தான் மொத்தமாக உறவை முறித்துள்ளது. 5 முக்கியமான முடிவுகளை
பாகிஸ்தான் தற்போது எடுத்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் இரண்டாக
பிரிக்கப்பட்டு, அதற்கான சிறப்பு அந்தஸ்தும் நீக்கப்பட்டுள்ளது. இது
பாகிஸ்தான் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
இதுகுறித்து
பெரிய எதிர்வினையாற்றாமல் இருந்த பாகிஸ்தான் தற்போது இதில் ராஜாங்க ரீதியான
நடவடிக்கையில் இறங்கி உள்ளது. இந்தியாவுடனான உறவை முறித்துக் கொள்வதாக
அறிவித்துள்ளது.
முதலில் என்ன ?
அதன்படி
முதற்கட்டமாக, இந்தியாவுடன் அனைத்து விதமான தூதரக உறவுகளையும் பாகிஸ்தான்
முறித்துக் கொள்கிறது. எந்த விதமான அரசு தொடர்பான உறவுகளும் இனி இருக்காது.
இரண்டு நாட்டு தூதராக அதிகாரிகளும் சொந்த நாட்டிற்க்கு திருப்பி
அனுப்பப்படுவார்கள் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
என்ன உறவு?
இரண்டு
நாட்டிற்கு இடையில் இருந்த வர்த்தக உறவும் முடிவிற்கு வருகிறது. இரண்டு
நாடுகளுக்கு இடையில் இனி எந்த விதமான ஏற்றுமதி, இறக்குமதியும் இருக்காது.
வாகா எல்லை மூடப்படும். பேருந்து போக்குவரத்து கூட இருக்காது.
என்ன ஒப்பந்தம்
இதற்கு
முன் செய்யப்பட ஒப்பந்தங்கள், இதற்கு முன் கையெழுத்து இடப்பட்ட முக்கிய
புரிந்துணர்வுகள் எல்லாம் இனி பரிசீலிக்கப்படும். இதை தற்போது பாகிஸ்தான்
ரத்து செய்யவில்லை. ஆனால் இது தொடர்பான அனைத்து விஷயங்களை பாகிஸ்தான் ஆய்வு
செய்து பின் முடிவு செய்யும்.
ஐநா என்ன
ஜம்மு
காஷ்மீர் விவகாரத்தில் நடந்த அதிரடி மாற்றங்கள் குறித்து ஐநாவில் முறையிட
உள்ளதாக பாகிஸ்தான் முடிவு எடுத்துள்ளது. ஐநாவில் மட்டுமில்லாமல் ஐநா
பாதுகாப்பு கவுன்சிலும் முறையிட போவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. ஐநா
பாதுகாப்பு கவுன்சிலில் தற்போது சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டிஷ்,
அமெரிக்கா ஆகிய நாடுகள் இருக்கிறது. இவர்களிடம் பாகிஸ்தான் தரப்பில் புகார்
அளிக்கப்பட உள்ளது.
கடைசி
இதையடுத்து
இந்திய சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அனுசரிக்க போவதாக பாகிஸ்தான்
அறிவித்து உள்ளது. இந்திய சுதந்திர தினத்திற்கு முதல்நாள் பாகிஸ்தான்
சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதை காஷ்மீர் போராளிகளுக்கு மரியாதை
செலுத்தவும் பயன்படுத்த போவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ள
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக