
இதுகுறித்து புதுச்சேரி அறிவியல்
தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை இயக்குனர் ஸ்மிதா வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பில், “ புதுச்சேரி அரசு புதுவை யூனியன் பிரதேசத்தில்
ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க
உத்தேசித்து பொதுமக்களின் கருத்துகளை பெற அதன் வரைவு அறிக்கை கடந்த
8.2.2019 அன்று அரசு சார்பில் வெளியிட்டது. அதன்படி சுற்றுச்சூழல் துறை
அமைச்சரின் தலைமையில் பிளாஸ்டிக் வர்த்தகர் சங்கம், ஜவுளி சங்கம் மற்றும்
உணவு விடுதி சங்கம் போன்ற பல்வேறு அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள்,
ஆலோசனைகள் மற்றும் பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட
கருத்துகள் அடிப்படையில் 10 வகையான ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்
பொருட்களை புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தயாரித்தல், எடுத்துச் செல்வது,
விற்பனை செய்வது, சேகரித்து வைத்தல் உள்ளிட்ட பயன்பாட்டிற்கு இன்று தடை
விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி பாலித்தீன், பிளாஸ்டிக், பாலிப்ரொப்பலீன்
தூக்குப் பைகள் (கேரி பேக்குகள்), பாலித்தீன், பிளாஸ்டிக் குவளைகள்,
பாலித்தீன், பிளாஸ்டிக் தட்டுகள், தெர்மாக்கோல் குவளைகள், தெர்மாக்கோல்
தட்டுகள், உணவு பொருட்களை கட்ட உபயோகிக்கும் பிளாஸ்டிக் ஒட்டும்தாள், உணவு
அருந்தும் மேஜையின் மேல் விரிக்கப்படும் பிளாஸ்டிக் தாள், நீர் நிரப்ப
பயன்படும் பைகள் (தண்ணீர் பாக்கெட்டுகள்), பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள்
(ஸ்டிரா), பிளாஸ்டிக் கொடி போன்றவை தடை செய்யப்படுகிறது. இந்த தடை ஆணையை
மீறுபவர்கள் சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) விதியின்படி தண்டிக்கப்படுவார்கள்’
என் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நேற்று சட்டசபை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல்
மாசு ஏற்படுகிறது. வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் செல்வதில் தடை
ஏற்படுகிறது. மனிதர்களுக்கு நோய் உருவாகும் நிலை உள்ளது என்பதால்
பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இந்த தடை ஆணையை
மாசு கட்டுப்பாட்டு கழகம், நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள்
உள்ளிட்ட அதிகாரிகள், வருவாய் துறை தாசில்தார், உணவு ஆய்வாளர்கள்
நடைமுறைப்படுத்துவார்கள். மக்களின் ஆரோக்கிய வாழ்க்கையை கருத்தில் கொண்டு
இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட பொருட்களுக்கு மாற்றாக 8
வகையான பொருட்கள் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் தடை ஆணையை
மீறுபவர்கள் மீது சட்டவிதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும். ரூ 5,000
முதல் 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்” என்றா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக