
இவரது இந்த முடிவு பல்வேறு விதமான தாக்கங்களை சிறுதொழில் செய்யும் வணிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி விட்டு போயுள்ளது.
சித்தார்த்தாவுக்கு என்ன குறைச்சல்.. நல்ல வசதி, நல்ல சொத்து, மிக திறமையானவர், கடினமான உழைப்பாளி.. தன் குடும்பத் தொழிலான, காபி கொட்டை ஏற்றுமதியைதான் இவரும் கையில் எடுத்தார் பிசினஸ் என்று எடுத்து கொண்டால் தொழிலில் ஏற்பட்ட சிக்கல்கள், கடன்கள் வருவது இயல்பு என்பதை இத்தனை வருடங்களாகவே உச்சத்தில் இருந்த சித்தார்த்தா புரிந்து கொள்ளாதது ஆச்சரியம்தான். ஆரம்பத்தில் இருந்தே லாபத்தையும், தொழில் பெருக்கத்தையும் பார்த்தவருக்கு சிறு சறுக்கலை ஏற்று கொள்ள முடியாத அளவுக்கு மனோபாவம் இருப்பது அதிர்ச்சியாகவும் உள்ளது.
உயிரோடு இருந்து பிரச்சனைகளை எதிர்கொள்ளும் திறனை அவருக்கு சுற்றி இருந்தவர்கள் தர தவறி விட்டதும் தெரிகிறது. கடன் வந்துவிட்டால், அதை அடைக்க நிறைய முயற்சி செய்திருக்கலாம், அல்லது இருக்கிற சொத்தை விற்று கடனை அடைத்திருக்கலாம். அம்பானிக்கும்தான் நஷ்டம் என்று சொன்னார்கள்.. மீளவில்லையா? அல்லது கோடி கோடியாய் கடனை வாங்கி கொண்டு ஒருத்தர் லண்டனில் சுகபோக வாழ்வு வாழவில்லையா?
சித்தார்த்தின் தற்கொலை 2 விஷயங்களை உணர்த்திவிட்டு போயுள்ளது. ஆனானப்பட்ட சித்தார்த்தே இப்படி ஒரு முடிவை எடுத்ததால், சிறு, குறு தொழிலை நடத்தி வரும் பிசினஸ்வாதிகளின் மனநிலைமை மிகவும் பலவீனமாகும் சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது.. தொழிலில் இருக்கும் கொஞ்சம் நஞ்சம் தைரியத்தையும் சித்தார்த்தின் தற்கொலை துடைத்து கொண்டு போய்விடும்படி ஆகிவிடும் அபாயம் ஏற்பட்டுவிடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக