புதன், 31 ஜூலை, 2019

நாம் தமிழர் நிர்வாகி பணம் ஏமாற்றியதால் தற்கொலைக்கு முயன்ற தமிழ்மணியின் மனைவி .. மருத்துவ மனையில்


எ.சிவகுமார் : சீமானின் நாம் தமிழர் கட்சி சார்பாக தேர்தலில் நின்று தோல்வி அடைந்தவர்கள் நிலை என்ன? அவர்களின் பொருளாதார பின்னணி என்ன? அவர்கள் தொலைத்த பணத்தை எப்படி ஈடுகட்டுவார்கள் என்றெல்லாம் நான் கேள்வி எழுப்பிய பொழுது பதில் தர யாரும் முன்வரவில்லை. மாறாக கேள்விக்கு உள்நோக்கம் மட்டுமே கற்பிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 2016 ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக நின்ற வண்டாரி தமிழ்மணி என்பவர் தற்கொலைக்கு முயல, அவர் மனைவி தீக்குளித்து இருக்கிறார்.
சொந்தமாக நகைக்கடை வைத்திருந்தவர் அரசியலால் அதை இழந்து விட்டு, கொஞ்சம் பணத்தைத் தேற்றி ஒரு டாடா ஏஸ் வண்டியை வாங்கி வாடகைக்கு ஓட்டி வந்துள்ளார். அதற்கு மாதாந்திர தவணை கட்ட முடியாமல் போகும் அளவுக்கு வறுமை விரட்ட இவர் நகைக்கடை வைத்திருந்த காலத்தில் இவரிடம் கடன் வாங்கிய ஒரு நா.த.க பிரமுகரிடம் கொடுக்க வேண்டிய கடனை கேட்க, அது பெரும் சண்டையாகி, முற்றி போனதால் கடல் கடந்து எல்லாம் மிரட்டலுக்கு ஆளாகியிருக்கிறார்.
விரக்தியில் அவர் தற்கொலைக்கு முயல, அவர் மனைவி தீக்குளிக்க, இன்று அவர் குழந்தைகள் அநாதை ஆகிவிடும் நிலைமை.

பாவம் தம்பிகள் #Justise_For_Tamilmani என்று முகநூல் பதிவுகள் எழுதிக்கொண்டிருக்கின்றார்கள்.
இவ்விவகாரத்தில் புகழேந்தி, துரைமுருகன், சீமான் என்று எல்லார் பெயரும் அடிபடுகிறது. ஆடியோக்கள் ஏதேனும் வெளிவரும் சாத்தியக்கூறுயிருக்கிறது.
எப்படி கேப்டனின் கட்சியை நம்பி தமிழகம் முழுக்க பலர் தங்கள் வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் இழந்து வீணாக போனார்களோ அது மாதிரி ஒரு கூட்டம் மெல்ல நா.த.க.வில் உருவாகிக்கொண்டிருக்கிறது.
வருத்தப்படுவதை தவிர வேறு ஒன்றும் செய்வதற்கில்லை.


திருமாறன் மணி
வண்டாரி தமிழ்மணியின் மனைவிக்கு தீ விபத்து ஏற்பட்டதில் இருந்து , வண்டாரியின் மனைவி ஜான்சி ராணியை, மருத்துவமனையில் அனுமதித்து, இன்று மதியம் வரை மருத்துவர்களுடன் உரையாடி அவரது நிலை குறித்து தெரிந்தவன் என்ற முறையிலே இந்த பதிவை எழுதுகின்றேன்.....
63 % சதவீத தீ காயங்களுடன், உடல் உறுப்புகள் சேதம் அடைந்த நிலையில் திருமதி. ஜான்சி ராணி, உயிருக்கு ஆபத்தான நிலையலேயே உள்ளார், சனிக்கிழமை அல்லது ஞாயிற்று கிழமை அன்று தான் அவரது நிலை தெரியவரும். அவர் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு . ஈசன் அருளால் அவர் உயிர் வாழ வேண்டும் என்பதே எனது பிராத்தனைகள்....உயிர் பிழைப்பினும், அவர் ஒரு பொம்மையை போன்றே தனது எஞ்சிய ஆயுளை கழிக்க வேண்டும் .....
தன் வாழ்நாள் எல்லாம் இந்த கடசிக்காக உழைத்தவனுக்கு குறைந்தபட்ச மருத்தவத்திற்கு கூட கட்சியில் இருந்து இப்பொழுதுவரை எந்தவித பொருளாதார உதவியை செய்ய கூட யாரும் முன்வரவில்லை.
இந்த மூன்று நாள் இரவு , பகலாக, மருத்துவமனையில் வண்டாரி தமிழ்மணியின் கண்ணீரை அருகில் இருந்து பார்த்தவன், உடன் இருப்பவன் என்முறையில் சொல்கின்றேன்.... கடந்த 15 நாட்களாக நடந்தவைகள் அனைத்தையும் அறிந்தவன் என்ற முறையில் சொல்கின்றேன், ஜான்சி ராணியில் தீ விபத்திற்கு, சாட்டை துரை முருகனின் முழு தூண்டுதல் மற்றும் முறையற்ற முறையில் அந்த பெண்ணிடம் பேசிய முறையே காரணம். நடந்த துக்க சம்பவத்தை மறைத்து துரைமுருகனை காப்பாற்ற நினைக்கும் மனப்போக்கு மிகவும் வருத்தத்திற்குரியது. வண்டாரி தமிழ்மணியின் குடும்பத்தின் மருத்துவ செலவை ஏற்று , துரைமுருகன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காவிடில் , நானே தனிப்பட்ட முறையில் மதுரை மாவட்ட காவல் ஆய்வாளர் அவர்களிடமும், முதலமைச்சர் தனி பிரிவு செயலாளரிடமும் மனு அளிப்பேன்.
வண்டாரி தமிழ்மணி என்பவர் எனது நண்பர் கூட அல்ல, அவன் என்னுடன் பள்ளியிலோ, கல்லுரியிலோ உடன் படித்தவன் அல்ல... கட்சியிலும் எனக்கு நெருக்கமானவன் அல்ல..... எனது நண்பர்களுக்கு அவன் நண்பன் அவ்வளவு தான்... உடல் எறிந்த அவனது மனைவியின் உடலை வாகனத்தில் இருந்து தூக்கி மருத்துவமனையில் அனுமதித்தவன், அவள் இரண்டு பச்சிளங் குழந்தைகளின் தாய் என்பதே எனது ரௌத்திரத்தின் காரணம்....அவள் உயிர் பிழைத்தாலும் இனி அவள் நடைபிணமே.....மனசாட்சி இருப்பின் மருத்துவ செலவை ஏற்று...
சாட்டை துரைமுருகன் மீது நடவடிக்கை எடுங்கள்.....
குறைந்த பட்ச மனித நேயத்துடன் நடந்து கொள்ளுங்கள்...
- திருமாறன் மணி

கருத்துகள் இல்லை: