சனி, 3 ஆகஸ்ட், 2019

காஷ்மீரில் படைகள் குவிப்பு ... அவசர முடிவு எதையும் எடுத்துவிட வேண்டாம் -குலாம்நபி ஆசாத் வேண்டுகோள்


மாலைமலர் :காஷ்மீர் விவகாரத்தில் அவசர முடிவு எதையும் எடுத்துவிட வேண்டாம் என்று காங். மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் அரசிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். புதுடெல்லி: பயங்கரவாதிகள் அச்சுறுத்தலைத் தொடர்ந்து, காஷ்மீரில் உள்ள அமர்நாத் யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் உடனே சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்ல மாநில அரசு அறிவுரை வழங்கியுள்ளது. இது தொடர்பாக அரசுக்கு காங். மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதில், காஷ்மீர் விவகாரத்தில் அவசர முடிவு எதையும் எடுத்துவிட வேண்டாம். அதிகப்படியான பாதுகாப்புப்படை குவிப்பு, அமர்நாத் யாத்ரீகர்களை திரும்ப  செல்ல வேண்டும் என்ற அறிவிப்பு உள்ளிட்டவை மக்களிடையே அச்சத்தை  ஏற்படுத்தியுள்ளது.
மன்மோகன் சிங் தலைமையில் முக்கிய காங்கிரஸ் தலைவர்கள், ஜம்மு  காஷ்மீர் கொள்கை அமைப்பு குழுவை சந்தித்தோம். ஜம்மு காஷ்மீர் குறித்து வெளியாகும் தகவல் பற்றி ஆழ்ந்த வருத்தத்தை பதிவு செய்தோம் என்றார்.

கருத்துகள் இல்லை: