திங்கள், 29 ஜூலை, 2019

அஞ்சல் துறை வேலைவாய்ப்பில் அநீதி... தாழ்த்தப்பட்டோருக்கு கட் ஆஃப் 95 மார்க்.. முன்னேறிய பிரிவினருக்கு 42!

அஞ்சல் துறை வேலைவாய்ப்பில் அநீதி... தாழ்த்தப்பட்டோருக்கு கட் ஆஃப் 95 மார்க்.. முன்னேறிய பிரிவினருக்கு 42!kalaignarseithigal.com - vignesh selvaraj : அஞ்சல் துறையில் வேலைக்கு தேர்வாக தாழ்த்தப்பட்டோர் 94.8 மதிப்பெண்கள் எடுக்கவேண்டும். முன்னேறிய பிரிவினர் 42 மதிப்பெண்கள் எடுத்தால் வேலை எனும் நிலை ஏற்பட்டுள்ளது. : இந்திய அரசின் அஞ்சல் துறை, கிளை அதிகாரிகளுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அஞ்சல் துறை வட்டத்தில் 4,442 பணியிடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பத்தாம் வகுப்பு தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்பட்டவர்கள் விவரம் வெளியாகியுள்ளது. அதில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 100க்கு 92 மதிப்பெண்கள் பெற்றிருந்தால் தேர்ச்சி பெற்றுள்ளனர். தாழ்த்தப்பட்ட பிரிவினர் 94.8 மதிப்பெண் பெற்றிருந்தால் தேர்ச்சி பெறுவார்கள். பழங்குடியினருக்கு குறைந்தபட்ச கட் ஆஃப் மதிப்பெண் 89.6.
ஆனால் பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினர் 42 மதிப்பெண் வாங்கினாலே வேலைவாய்ப்பு கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 42 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற 453 முன்னேறிய பிரிவினர் அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.



இட ஒதுக்கீடு அடிப்படையில் தேர்ச்சி பெறவும், பிற்படுத்த, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கடுமையான போட்டித் தேர்வுகளில் முட்டிமோதி வெற்றிபெற வேண்டியதாயிருக்கிறது. ஆனால், முன்னேறிய பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ள 10% பொருளாதார இட ஒதுக்கீட்டின் மூலம் மிகக்குறைவான மதிப்பெண்களைப் பெற்றுள்ளவர்களும் தேர்வாகியுள்ளனர்.
சமூகத்தில் முன்னேறிய பிரிவினருக்கான விகிதாச்சாரம் குறைவாக இருக்கும்போதிலும், அதிகமான விகிதத்தில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமூக நீதியைக் குழிதோண்டிப் புதைத்திருக்கும் இந்த 10% பொருளாதார இட ஒதுக்கீட்டுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது

கருத்துகள் இல்லை: