புதன், 31 ஜூலை, 2019

பணமதிப்பிழப்பால் கடுமையாக பாதிக்கப்பட்ட தொழிலதிபர் சித்தார்த்

Shyamsundar /tamil.oneindia.com  |:  பெங்களூர்: காபி டே நிறுவனர் சித்தார்த்தா பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் பெரிய பொருளாதார பின்னடைவை சந்தித்ததாகவும், அதிக வரி நெருக்கடியால் கஷ்டப்பட்டதாகவும் தகவல்கள் வருகிறது. 
 காபி டே நிறுவனர் சித்தார்த்தா மரணம் நாடு முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று முதல்நாள் மாலை காணாமல் போன அவர், நேற்று முழுக்க மங்களூர் அருகே நேத்ராவதி ஆற்றில் தேடப்பட்டு வந்தார். ஆனால் நேற்று இரவு முழுக்க அவரின் உடல் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. 
இந்த நிலையில் இன்று அதிகாலை இவரின் உடல் மீனவர்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. 
காபி டே நிறுவன தற்காலிகத் தலைவராக எஸ்வி ரங்கநாத் நியமனம் 
கடுமையான நிதி நெருக்கடி மற்றும் கடன் காரணமாக இவர் கஷ்டப்பட்டு வந்தார். இந்த தொடர் நிதி பிரச்சனை அவரை மொத்தமாக முடக்கி போட்டது. 
இதுதான் இவரை தற்கொலைக்கு தூண்டியது. 
அதேபோல் பணமதிப்பிழப்பு நடவடிக்கையும் இவரின் வியாபாரத்தில் பெரிய சிக்கலை ஏற்படுத்தியது. 2016ல் பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வரப்பட்ட பின் இவருடைய பிஸ்னஸ் மொத்தமாக படுத்து இருக்கிறது.
அந்த கால கட்டத்தில்தான் இவர் தன்னுடைய சொத்துக்களை அதிகம் விற்றார். அப்போதுதான் பங்குகளில் இவருக்கு நிறைய பிரச்சனை வந்துள்ளது. இரண்டு மாதம் இரண்டு மாதம் 2016 நவம்பரில் நன்றாக வருமானம் ஈட்டிய காபி டே நிறுவனம் போக போக இழப்பை சந்தித்தது. அதன்பின் கொஞ்சம் நிலைமை சரியான பின், மீண்டும் காபி டே கொஞ்சம் மேலே வர தொடங்கி உள்ளது. 
ஆனால் அதன் பின் வருமான வரித்துறை அதிகாரிகளால் இவர் தொடர்ந்து குறி வைக்கப்பட்டார். தொடர் ரெய்டு தொடர் ரெய்டு இவர் வீடு மற்றும் அலுவலகங்களில் தொடர்ந்து பலமுறை ரெய்டு நடந்தது. முன்னாள் அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா பாஜகவில் சேர்ந்த பின்பும் கூட வருமான வரித்துறை இவரை குறி வைப்பதை நிறுத்தவில்லை என்றுதான் கூட வேண்டும். 
ஆம், மத்திய அரசில் இருந்தும் இவருக்கு எதிராக அழுத்தம் வந்தது. என்ன புகார் என்ன புகார் அதேபோல் இவர் 300 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துவிட்டதாக புகாரும் வைக்கப்பட்டது. அதோடு இவரின் 150 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் முடக்கம் செய்யப்பட்டதும் பிரச்சனை ஆனது. இந்த சிக்கல்தான் இவரின் தற்கொலைக்கு முக்கிய காரணமாகி இருக்கும் என்று கூறுகிறார்கள்.

கருத்துகள் இல்லை: